கொம்பன் படத்துக்கு பிறகு இயக்குர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ‘விருமன்’. இப்படத்தை நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தனர். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை படம் 50 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
நடுராத்திரி மூணு மணிக்கெல்லாம் சம்மர்சால்ட் அடிக்கவுட்டியே @iamSandy_Off master, மன்னிக்கவேமாட்டேன். Never done these acrobats before
இனி எல்லா ஊர் திருவிழாலயும் நம்ம பாட்டு கண்டிப்பா இருக்கும் @thisisysr https://t.co/TmZ3COwPPl#வானம்_கிடுகிடுங்க video song.
— Actor Karthi (@Karthi_Offl) August 18, 2022
இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் வானம் கிடுகிடுங்க என்ற பாடலின் வீடியோவை கார்த்தி வெளியிட்டார். பாடலை வெளியிட்ட நடிகர் கார்த்தி நடன இயக்குநர் சாண்டியை Tag செய்து ட்வீட் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்டில், நடுராத்திரி மூணு மணிக்கெல்லாம் சம்மர்சால்ட் அடிக்கவுட்டியே சாண்டி மாஸ்டர். மன்னிக்கவேமாட்டேன். இதுமாதிரி வித்தைகளை இதுக்கு முன்னர் நான் செய்தது இல்லை. இனி எல்லா ஊர் திருவிழாலயும் நம்ம பாட்டு கண்டிப்பா இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா” என பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் தற்போது ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, விருமன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா, கார்த்தி, அதிதி சங்கர் மற்றும் படக்குழு பலரும் அவர்களுடைய குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். அப்பொழுது நடிகர் கார்த்தியுடன் அதிதி சங்கர் கபடி விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளத்த்ல் வைரலாகின.
விழாவில் பேசிய நடிகர் சூர்யா, “விருமன் படத்திற்காக கேமராவுக்கு பின்னால் உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எந்த வெற்றியும் தனி வெற்றியாகாது. குடும்பங்களும் அதற்கு ஒரு முக்கிய காரணம். எங்களை மேலே உயர்த்திவிட எங்களுக்கு பின்னால் ஒரு பலம் உள்ளது. அவர்கள் எங்கள் வீட்டிலிருக்கும் பெண்கள்தான்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.