பா.இரஞ்சித்தின் புதிய படம் – நாளை வெளியாகிறது ட்ரெய்லர்

பா.இரஞ்சித் கடைசியாக சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இரஞ்சித் விக்ரமை வைத்து படத்தை இயக்குகிறார். இந்தப் படமானது பெரும் பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் பீரியட் படமாக உருவாக இருக்கிறது. வரிசையாக கமிட்டாகியிருக்கும் இரஞ்சித் மாறுபட்ட களத்தை தேர்ந்தெடுத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார்.

இதில் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், சார்பட்டா பரம்பரையில் கதாநாயகியாக நடித்த துஷாரா விஜயன், டான்சிங் ரோஸாக நடித்த ஷபீர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.வழக்கமாக பணியாற்றும் குழுவோடு இல்லாமல் புதிய தொழில்நுட்ப குழுவோடு களமிறங்கியிருக்கிறார் பா.இரஞ்சித். அதன்படி டென்மா என்பவர் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

 

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 6ஆம் தேதி வெளியானது. படத்தில் இடம்பெற்ற ரங்கராட்டினம் முதல் சிங்கிள் பாடல் கடந்த 8ஆம் தேதி வெளியானது. படமானது ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இப்படம் சென்சார் சான்றிதழுக்காக சென்தாகவும்; படத்தில் குறிப்பிட்ட சாதி பற்றிய காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் சென்சார் அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்து சென்சார் சான்றிதழ் தர மறுத்ததாகவும் தகவல் வெளியானது.

 

இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.