பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி தனது கணவருடன் விவாகரத்து..? – கிரிக்கெட் வீரர் விளக்கம்!

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக தற்போது திகழ்கிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தனஸ்ரீ வர்மா சமூக வலைத்தளங்களில் மிகவும் ‘ஆக்ட்டிவாக’ இருப்பவர். இவர் பதிவிடும் நடன வீடியோக்களை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் ‘தனஸ்ரீ சஹால்’ என்ற பெயருடன் தனஸ்ரீ தனது சமூக வலைத்தள கணக்கை நிர்வகித்து வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது தனது கணவரின் பெயரை நீக்கி மீண்டும் தனஸ்ரீ வர்மா என மாற்றியுள்ளார்.

இதை தொடர்ந்து சஹால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “புதிய வாழ்க்கை தயாராகிறது” என பதிவிட்டு இருந்தார். இதனால் சஹால்- தனஸ்ரீ வர்மா இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிகிறார்களா என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதனால் சமூக வலைத்தளங்களில் இவர்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சஹால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது குறித்து யுஸ்வேந்திர சஹால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதாவது:-

எங்கள் உறவு தொடர்பான எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள். தயவுசெய்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.