செங்கல்பட்டு: அஸ்வினி சேகர் உள்ளிட்ட 12 பேருக்கு கடன் வழங்க ஆணை தயார் நிலையில் உள்ளது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் விளக்கம் அளித்துள்ளார். அஸ்வினி சேகருக்கு ரூ.5 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கடன் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் மற்றவர்களோடு சேர்ந்துதான் கடனை பெறுவேன் என அஸ்வினி சேகர் தெரிவித்ததால் தாமதம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
