கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளரும் மாற்றுத் திறனாளியுமான சிவிக் சந்திரன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அத்துடன், அந்தப் பெண் எழுத்தாளருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த கோழிக்கோடு நீதிமன்றம், எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
தீர்ப்பின் போது நீதிமன்றம் கூறிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. நீதிபதியின் உத்தரவில், மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை வைத்துப் பார்க்கும்போது, புகார் அளித்த பெண் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ஆடை அணிந்துள்ளார் எனவும், 74 வயதான மாற்றுத்திறனாளி நபர், பெண்ணை வலுக்கட்டாயமாக தனது மடியில் அமர வைத்து பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக கூறுவதை நம்பமுடியவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
அதனால் பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கான சட்டப்பிரிவு 354-ஏ குற்றம் சாட்டப்பட்டவருக்கு பொருந்தாது எனக்கருதி அவருக்கு முன் ஜாமீன் வழங்குவதாகவும், நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த தீர்ப்புக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தை கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென டெல்லி மகளிர் ஆனையம் கோரிக்கை விடுத்துள்ளது.
The Kozhikode Sessions Court, while granting bail to activist Civic Chandran in a sexual harassment case, has made regressive observations. The logic women invite sexual assault for their dress is both victim blaming & invoking rape-victim stereotypes. Also, an absolute nonsense.
— V P Sanu (@VP_Sanu) August 17, 2022
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ