பெரியகுளத்தில் ஓபிஎஸ்… அடுத்து எடுக்கப் போகும் அதிரடி முடிவு… அதிரப் போகும் அதிமுக!

ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இதன்மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக

தேர்வு செய்யப்பட்டது செல்லாதது ஆகிவிட்டது. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும்

ஆகியோர் தனித்தனியே நியமித்த நிர்வாகிகளின் பதவிகளும் இல்லாமல் போனது. அதாவது, ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையே அதிமுகவில் தொடரும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிமுகவில் பிளவுபட்டு கிடக்கும் இரண்டு தலைவர்களும் அடுத்து என்ன செய்யப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருபக்கம் ஈபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட மாட்டோம். கட்சி பொதுக்குழுவில் தங்களுக்கான செல்வாக்கை நிரூபித்து தலைமைக்கான நாற்காலியில் அமருவோம் என்று உறுதியாக கூறுகின்றனர். மறுபுறம் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும் என்று

தரப்பு கூறிக் கொண்டு சற்றே இறங்கி வந்திருப்பதாக தெரிகிறது. ஏனெனில் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கையும், செய்தியாளர்களிடம் பேசிய பேச்சும் அதையே சுட்டிக் காட்டுகின்றன.

கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு உட்பட்டு இசைந்து வரும் யாராக இருந்தாலும் அரவணைத்துக் கொள்ளப்படுவர் என்று தெரிவித்துள்ளார். அப்படியெனில் முதலில் சசிகலாவை தான் அதிமுகவிற்குள் சேர்ப்பார் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. இதற்கிடையில் டிடிவி தினகரன் தனக்கென்று ஒரு கட்சி இருக்கிறது. அதை விட்டுவிட்டு அதிமுகவில் சேரும் எண்ணமில்லை என்று தெரிவித்துவிட்டார்.

அடுத்ததாக எடப்பாடி தரப்பை அரவணைத்து ஏற்றுக் கொள்ளப் போகிறாரா? ஓபிஎஸ் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு ஓபிஎஸ் தயாராக இருந்தாலும் ஈபிஎஸ் தரப்பு அவ்வாறான நிலைப்பாட்டில் இல்லை. எப்படியும் மோதி பார்த்து விடலாம் என்றிருக்கின்றனர். இத்தகைய சூழலில் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார். அவருக்கு மதுரை விமான நிலையம் முதல் பெரியகுளம் வரை வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஓபிஎஸ் வருகையை ஒட்டி அவரது வீட்டில் அதிமுகவினர் பலரும் காத்திருந்தனர். அதில் தேனி மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அடங்குவர். இதற்கான முறைப்படி அறிவிப்பை தேனி மாவட்ட கழக செயலாளர் சையது கான் வெளியிட்டிருந்தார். இதையடுத்து ஓபிஎஸ் தலைமையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் யாரை அரவணைத்து செல்லலாம். சட்ட ரீதியான அடுத்தகட்ட அணுகுமுறைகள் என்னென்ன? எடப்பாடி தரப்பு போடும் தடங்கல்களை துவம்சம் செய்வது எப்படி? போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. இதில் சில விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. முழு பிளானும் தெரிந்தால் எடப்பாடி கோஷ்டி உஷாராகி விடலாம். எனவே படிப்படியாக காய்களை நகர்த்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.