வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை ‘ஸ்விட்ச் மொபிலிட்டி’ நிறுவனம் தயாரித்த, ‘பேட்டரி’யில் இயங்கும் நாட்டின் முதல் இரண்டு அடுக்கு ‘ஏசி’ பேருந்து, மும்பையில் இன்று (ஆக.18) அறிமுகப்படுத்தப்பட்டது.
‘அசோக் லேலண்ட்’ நிறுவனத்தின் துணை அமைப்பான ‘ஸ்விட்ச் மொபிலிட்டி’ என்ற நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ‘பேட்டரி’யில் இயங்கும் இரண்டு அடுக்கு ‘ஏசி’ பேருந்துகளை தயாரித்து வருகிறது.ஐரோப்பிய நாடான பிரிட்டன் மற்றும் இந்தியாவில் இந்த பேருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலை கள் உள்ளன. இவர்கள் தயாரித்த 100 இரண்டடுக்கு ஏசி பேருந்துகள், பிரிட்டனில் பொது போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், இந்த இரண்டடுக்கு பேருந்துகளை வாங்க, மஹாராஷ்டிரா வின் மும்பை போக்குவரத்து நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பேருந்தின் அறிமுக விழா மும்பையில் நடந்தது.
ஸ்விட்ச் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மகேஷ் பாபு கூறியதாவது:மும்பை நகரில், 200 இரண்டடுக்கு ஏசி பேருந்துக்கு போக்குவரத்துத் துறை, ‘ஆர்டர்’ கொடுத்து உள்ளது.
நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் 50 பேருந்துகளை ஒப்படைத்து விடுவோம். மேலும் பல நகரங்கள் இந்த பேட்டரி பேருந்தை வாங்குவதில் ஆர்வமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். ‘இந்த பேட்டரி பேருந்து முழு ‘சார்ஜ்’ செய்தால், 250 கி.மீ., துாரம் வரை பயணிக்க கூடியது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement