வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹெல்சிங்கி : போதை பார்ட்டியில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பெண் பிரதமர் சன்னா மரீன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக, சன்னா மரீன்(34) பதவி வகித்து வருகிறார். உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் சமூக வலைதளங்களான இன்டாகிராம், டுவிட்டரில் பிரதமர் சன்னா மரீன் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் மது அருந்தி போதையில் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது. இதையடுத்து பிரதமர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
முன்னதாக கடந்த 2020ல் பேஷன் இதழ் ஒன்றுக்கு லோ கட் ஜாக்கெட் அணிந்தபடி போஸ் கொடுத்தார். இதனை கண்டதும், சமூக வலைதளங்களில் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உயரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி செய்வது சரியல்ல என கண்டனம் தெரிவித்தனர்.
தற்போது போதையில் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது. பிரதமர் பதவிக்கு அவமரியாதையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் சன்னா மரீன் மீது அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பின்லாந்து ஊடகங்களும் விமர்சனம் செய்து வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement