சென்னை கோயம்பேடு திரையரங்கிற்கு தனது புதிய படத்தின் முதல் காட்சியை பார்க்கச்சென்ற நடிகர் தனுஷ், உடன்அழைத்துச்சென்ற மகன்களை தனியாக அனுப்பி விட்டு, படத்தின் நாயகி ராஷி கண்ணாவின் கையை பிடித்துக் கொண்டு திரையரங்கில் இருந்து வெளியே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக நடிகர் தனுஷ், தனது மகன்கள் மற்றும் படத்தின் நாயகி ராஷி கண்ணா உள்ளிட்டோருடன் கோயம் பேடு ரோகினி திரையரங்கிற்கு வந்திருந்தார்.
ரசிகர்கள் தனது படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை நாயகி ராஷி கண்ணாவுக்கு காண்பித்த தனுஷ், வெளியில் தன்னை காண்பதற்கு பெருங்கூட்டமே காத்திருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. திரையரங்கில் இருந்து பாதுகாப்பாக வெளியே செல்ல பவுன்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
படம் முடிந்ததும் தன்னுடன் அழைத்து வந்திருந்த மகன்களை வேறு ஒரு பெண்ணுடன் அனுப்பி வைத்த நடிகர் தனுஷ், கடைசிவரை வெளியே வராமல் திரையரங்கிற்குள்ளேயே காத்திருந்தார்.
திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் இருந்து வெளியே சென்று விட்டதை அறிந்ததும் நாயகி ராஷி கண்ணாவின் கையை பிடித்துக் கொண்டு மாடிப்படி வழியாக தலைதெரிக்க ஓடி வந்தார் நடிகர் தனுஷ்
காருக்கு செல்லும் வழியில் ரசிகர்கள் முண்டியடித்ததால் ,பவுன்சர்கள் உதவியுடன் இருவரும் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டனர்.
அப்படி இருந்தும் நடிகை ராஷிகண்ணாவிடம் கை கொடுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அந்த கூட்ட நெரிசலையும் மீறி தனுஷ், ராஷி கண்ணாவை பவுன்சர்கள் பத்திரமாக ஏற்றி அனுப்பி வைத்தனர்
ஏற்கனவே சுள்ளான் படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயம் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தனுஷின் கையில் முறிவு ஏற்பட்டது அன்று முதல் முண்டியடிக்கும் ரசிகர் கூட்டத்தை கண்டால் தனுஷ் ஒரு வித அச்சத்துக்குள்ளாவது குறிப்பிடதக்கது.