மும்பை:
பாலிவுட்டின்
முன்னணி
நடிகையான
மனீஷா
கொய்ராலா,
தமிழிலும்
சில
படங்களில்
நடித்துள்ளார்.
தமிழில்
பம்பாய்,
இந்தியன்,
முதல்வன்,
உயிரே,
ஆளவந்தான்,
பாபா
உள்ளிட்ட
படங்களில்
மனிஷா
கொய்ராலா
நடித்துள்ளார்.
மணிரத்னம்
இயக்கத்தில்
‘பம்பாய்’
படத்தில்
நடித்தது
குறித்து
மனம்
திறந்துள்ளார்
மனிஷா
கொய்ராலா.
பாலிவுட்
சூப்பர்
குயின்
1991ல்
வெளியான
‘செளதாகர்’
என்ற
இந்தி
படத்தின்
மூலம்
நடிகையாக
அறிமுகமான
மனிஷா
கொய்ராலா,
பாலிவுட்
ரசிகர்களை
கிறங்கடித்தார்.
மனிஷாவின்
கண்களில்
இருந்த
வசீகரமும்,
அவரது
நடிப்பும்
பலரது
கவனத்தையும்
ஈர்த்தது.
ரசிகர்கள்
இவரை
பாலிவுட்
சூப்பர்
குயினாக
கொண்டாடித்
தீர்த்தனர்.
ரசிகர்களிடம்
கிடைத்த
வரவேற்பால்,
தொடர்ந்து
இந்தி
படங்களில்
நடித்து
வந்தார்.
கோலிவுட்டில்
சூப்பர்
அறிமுகம்
அறிமுகமானதில்
இருந்தே
இந்தியில்
கலக்கி
வந்த
மனிஷா
கொய்ராலா,
அப்படியே
கோலிவுட்டிலும்
அடியெடுத்து
வைத்தார்.
மணிரத்னம்
இயக்கிய
‘பம்பாய்’
தான்
இவருக்கு
முதல்
படம்.
அரவிந்த்
சுவாமிக்கு
ஜோடியாக
ஷாகிரா
பானு
என்ற
கேரக்டரில்
நடித்த
மனிஷா,
ரசிகர்களை
உச்சுக்
கொட்ட
வைத்தார்.
தொடர்ந்து
மணிரத்னம்
இயக்கிய
உயிரே
படத்தில்
ஷாருக்கானுக்கு
ஜோடியாகவும்
நடித்திருந்தார்.
தமிழில்
முன்னணி
நடிகர்களுடன்
ஜோடி
‘பம்பாய்’
படத்தின்
மூலம்
தமிழ்
ரசிகர்களையும்
கிறங்கடித்த
மனிஷா,
அடுத்தடுத்து
டாப்
ஸ்டார்களின்
படங்களில்
கமிட்
ஆனார்.
ஷங்கர்
இயக்கத்தில்
கமல்
ஜோடியாக
‘இந்தியன்’,
அர்ஜுன்
ஜோடியாக
‘முதல்வன்’,
சூப்பர்
ஸ்டார்
ரஜினியுடன்
‘பாபா’,
மீண்டும்
கமலுடன்
இணைந்து
‘ஆளவந்தான்’,
‘மும்பை
எக்ஸ்பிரஸ்’
என
கோலிவுட்டையும்
ஒரு
கலக்கு
கலக்கினார்.
திருமணமும்
கேன்சர்
பாதிப்பும்
தமிழில்
அவ்வப்போது
படங்கள்
பண்ணினாலும்,
இந்தியில்
தொடர்ந்து
பல
சூப்பர்
ஹிட்
படங்களில்
அசத்தி
வந்தார்
மனிஷா
கொய்ராலா.
2010ல்
சாம்ராட்
தேகல்
என்பவரை
திருமணம்
செய்த
அவர்,
2
வருடத்தில்
விவாகரத்து
செய்தார்.
அதன்பின்னர்
கேன்சரால்
பாதிக்கப்பட்ட
மனிஷா,
தொடர்ந்து
சிகிச்சைப்
பெற்று
அதில்
இருந்தும்
மீண்டார்.
தற்போது
நடிப்பதை
குறைத்துக்கொண்ட
அவர்,
மணிரத்னம்
இயக்கிய
பம்பாய்
படத்தில்
நடித்தது
குறித்து
மனம்
திறந்துள்ளார்.
இதற்காக
பம்பாய்
படத்தில்
நடித்தேன்
“பம்பாய்
படத்தில்
வாய்ப்பு
கிடைத்தபோது,
என்னுடைய
20
வயதில்
அம்மாவாக
நடிக்க
வேண்டாம்
என
பலரும்
அட்வைஸ்
செய்தார்கள்.
அதோடு
அடுத்த
10
ஆண்டுகளில்
எனக்கு
பாட்டி
வேடங்கள்
தான்
கிடைக்கும்
என்றும்
அவர்கள்
நினைத்தார்கள்.
அதேநேரம்,
மணிரத்னம்
படத்தில்
நடிக்க
மறுப்பது
முட்டாள்தனமாக
இருக்கும்
என்பதையும்
சொன்னார்கள்.
உண்மையாக
பம்பாய்
படம்தான்
எனக்கு
மிகப்பெரிய
பெயரை
பெற்றுத்
தந்தது”
என
நெகிழ்ச்சியாக
கூறியுள்ளார்.