இந்திய ரீடைல் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பெரும் நிறுவனங்கள் மத்தியில் போட்டியும் அதிகரித்துள்ளது.
ஒருபக்கம் மெட்ரோ நிறுவனத்தையும் அதன் கிளைகளையும் வாங்க இந்திய நிறுவனங்கள் உடன் வெளிநாட்டு நிறுவனங்களும் போட்டிப்போட்டு வரும் நிலையில், மறுமுனையில் நாட்டின் முன்னணி ரீடைல் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் முகேஷ் அம்பானி-யின் ரீடைல் வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் உடன் போட்டிப்போட யாரும் இல்லை என நினைத்திருந்த வேளையில் டிமார்ட் ராதாகிஷன் தமனி முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ளார்.
மோடி அரசு அறிவிப்பை லாபமாக மாற்றும் முகேஷ் அம்பானி.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..!
ராதாகிஷன் தமனி
இந்திய பணக்காரர்களின் ஒருவரான ராதாகிஷன் தமனி-யின் சூப்பர்மார்கெட் செயின் நிறுவனமான டிமார்ட் தனது ஆஸ்தான வர்த்தக நடைமுறையில் இருந்து மாறி வேகமாக வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுக் களத்தில் இறங்கியுள்ளது.
5 மடங்கு உயர்த்த திட்ட
இந்திய ரீடைல் சந்தையில் டிமார்ட் கடைகளின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்-ன் சந்தை பங்கீட்டை அதிகரிக்கத் தனது கடைகளின் எண்ணிக்கை சுமார் 5 மடங்கு உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் அதிரடியாக விரிவாக்கம் செய்து வரும் முகேஷ் அம்பானி-யின் ரீலையன்ஸ் ரீடைல்-க்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்
டிமார்ட்-ன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் இந்தியாவின் 4வது பெரிய சூப்பர்மார்கெட் ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் 284 கடைகளை விரைவில் 5 மடங்கு உயர்த்தி 1500 ஆக அதிகரிக்க அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் சிஇஓ நெவில் நோரோன்ஹா தெரிவித்துள்ளார்.
இந்திய ரீடைல் சந்தை
மேலும் இந்திய ரீடைல் சந்தையில் இருக்கும் பெரு நிறுவனங்கள் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் இயங்கலாம், அடுத்த 20 வருடத்திற்கு ரீடைல் வர்த்தகத் துறையில் வளர்ச்சி விகிதம் மிகவும் சிறப்பாக உள்ளது என நெவில் நோரோன்ஹா தெரிவித்துள்ளார்.
டிமார்ட் கடைகள்
டிமார்ட் கடைகளுக்கு மிடில் கிளாஸ் மக்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகக் கொண்டுள்ள நிலையில் மார்ச் உடன் முடிந்த நிதியாண்டில் டிமார்ட் சுமார் 50 புதிய கடைகளைத் திறந்தது. டிமார்ட் தனது வரலாற்றில் ஒரு வருடத்தில் 50 கடைகளை இதுவரை திறந்தது இல்லை.
1500 கடைகள் இலக்கு
டிமார்ட்-ன் 1500 கடைகள் இலக்கு என்பது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்குப் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் மிகையில்லை, இதற்கு முக்கியக் காரணம் டிமார்ட்-ன் வர்த்தக முறை, தொடர்ந்து திரும்பத் திரும்ப வரும் வாடிக்கையாளர்கள் பலம் ஆகியவை ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தால் சாதிக்க முடியாதது.
ரிலையன்ஸ் ரீடைல்
இதேவேளையில் ரிலையன்ஸ் ரீடைல் தனது ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் மிகவும் வலிமையாக இருக்கும் நிலையில் டிமார்ட் ஈகாமர்ஸ் வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்தாலும் லாபமற்ற நிலையில் உள்ளது. இதை மேம்படுத்தவும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் சிஇஓ நெவில் நோரோன்ஹா திட்டமிட்டு உள்ளார்.
ஈஷா அம்பானி – முகேஷ் அம்பானி
டிமார்ட்-ன் அதிரடி வளர்ச்சி திட்டம் கட்டாயம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் மிகையில்லை. இதை எப்படி ஈஷா அம்பானி – முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகக் குழு சமாளிக்கப் போகிறது..? ஜெய்சூர்யாஸ் போன்ற சிறிய நிறுவனங்களைக் கைப்பற்ற முடியும், டிமார்ட்-ஐ கைப்பற்ற முடியாது..!
Radhakishan Damani Dmart plans to increase store count 5 times; Big Trouble for Mukesh Ambani Reliance Retail
Radhakishan Damani Dmart plans to increase store count 5 times; Big Trouble for Mukesh Ambani Reliance Retail முகேஷ் அம்பானி-க்குப் பயம் காட்டும் டிமார்ட் ராதாகிஷன் தமனி..!