முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவுக்கு வரும் திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடியைச் சேர்ந்த சிறுமிக்கு திங்கள்கிழமை (ஆக.22) அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் வீராபுரம் கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் – சௌபாக்யா தம்பதியின் 9 வயது மகளான டானியாவுக்கு மூன்றரைவயதில் முகத்தில் கரும்புள்ளி தோன்றியிருந்திருக்கிறது. சாதாரண ரத்தக்கட்டு என்று சிகிச்சை பெற்ற நிலையில், பாதிப்பு குறையவில்லை. ஆறு ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் சிறுமியின் ஒருபக்க முகம் சிதையத் தொடங்கியது.
இதனால் சிறுமிக்கு பள்ளியில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி குடும்பமே பல பிரச்னைகளை சந்தித்துள்ளது. ஒன்பது வயது சிறுமி இப்படியொரு உளவியல் தாக்குதலையும், மனநெருக்கடியையும் சந்தித்திருந்த நிலையில் அவர் தனது படிப்பையே தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்றைய தினம் உதவி கோரியிருந்தார்.
image
அவர் உதவிய கோரியது தொடர்பாக புதிய தலைமுறையில் செய்தியாக வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மருத்துவக் குழுவினருடன் நேரில் சென்று டான்யாவின் குடும்பத்தை சந்தித்தார். தொடர்ந்து, சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் வைத்து உயரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
image
இதைத்தொடர்ந்து சிறுமி டான்யாவுக்கான முழு சிகிச்சையையும் கட்டணமின்றி செய்வதற்கு தண்டலத்தில் உள்ள மருத்துவமனை உத்தரவாதம் அளித்துள்ளது. இதையடுத்து சிறுமி டான்யா இன்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விரைந்து அவர் குணமாவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு வரும் திங்கள்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இது சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. மேலும் திமுக சார்பில் கட்சியின் நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் சிறுமியின் குழந்தைக்கு வழங்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.