இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்புக்கு 100 ஓட்டங்கள் எடுத்துள்ளது
தென் ஆப்பிரிக்காவின் நோர்ட்ஜெ, ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜென்சென் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்
லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்து. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸை 5 ஓட்டங்களிலும், ஸக் க்ரவ்லேவை 9 ஓட்டங்களிலும் ரபடா ஆட்டமிழக்க செய்தார்.
Rabada strikes early 🔴
Live clips: https://t.co/2nFwGblL1E
🏴 #ENGvSA 🇿🇦 pic.twitter.com/zg1SZGPbAP
— England Cricket (@englandcricket) August 17, 2022
அடுத்து ஜோ ரூட் 8 ஓட்டங்களில் ஜென்சென் பந்துவீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த பேர்ஸ்டோவ் ஓட்டங்கள் எடுக்காமல் நோர்ட்ஜெ பந்துவீச்சில் போல்டானார்.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஓரளவு தாக்குப்பிடித்து 20 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அவரும் நோர்ட்ஜெ பந்துவீச்சில் கீகனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
Uppercut 🥊
Live clips: https://t.co/2nFwGblL1E
🏴 #ENGvSA 🇿🇦 @OPope32 pic.twitter.com/BrG78ivDiR
— England Cricket (@englandcricket) August 17, 2022
PC: Twitter
இவ்வாறாக இங்கிலாந்து அணி 100 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளை முதல் நாளிலேயே இழந்துள்ளது.
ஒலி போப் மட்டும் அரைசதம் அடித்து களத்தில் உள்ளார். இது அவருக்கு 8வது டெஸ்ட் அரைசதம் ஆகும்.
PC: Twitter