சேலம்: முல்லைப் பெரியாறு பேபி அணை அருகே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வேண்டும் என அணையின் கண்காணிப்பு மேற்பார்வை குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு செல்வதற்கு வல்லக்கடவு வழியாக 5 கிமீ சாலை அமைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
