கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில், வங்காளதேச எல்லையை ஒட்டிய தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துர் ரபிக். இவர், அல்கொய்தா இந்திய பிரிவின் மேற்கு வங்காளத்துக்கான பொறுப்பாளர் ஆவார்.
நேற்று முன்தினம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் காரிபாரி பகுதியில் ஒரு மறைவிடத்தில், காஜி எசான் ெமால்லா என்ற மற்றொரு அல்கொய்தா பயங்கரவாதியை சந்திப்பதற்காக அப்துர் ரபிக் வருவதாக மேற்கு வங்காள போலீசின் சிறப்பு அதிரடிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் பயங்கரவாதிகளுக்கு எந்த இடத்தில் வைத்து பயிற்சி அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
இருவரையும் பொறி வைத்து பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அந்த பகுதியில் குவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி, அப்துர் ரபிக், மொல்லாவை சந்திக்க வந்தார். அப்போது இருவரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். இருவரிடம் இருந்தும் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.