ஐதராபாத் : விஜய் தேவரகொண்டா தெலுங்கு மட்டுமில்லாமல் தன்னுடைய படங்கள் மூலம் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பான் இந்தியா ஸ்டாராக தொடர்ந்து வலம் வருகிறார்.
இவருக்கு ஆண் ரசிகர்களை காட்டிலும் பெண் ரசிகைகள் அதிகமாக உள்ளனர். இவரது ஒவ்வொரு ஸ்டைலும் ட்ரெண்டாக்கப்பட்டு வருகின்றன.
விஜய் தேவரகொண்டா அதிகமான படங்களில் நடித்துள்ள போதிலும் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் இவரது கேரியர் பெஸ்ட்டாக உள்ளன.
நடிகர் விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டா இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை அதிகமாக கொண்டுள்ளார். இவரது மேனரிசங்கள், தாடி, ஹேர்ஸ்டைல் உள்ளிட்ட ஒவ்வொரு விஷயங்களும் அவர்களை கவர்ந்து வருகிறது. தெலுங்கில் இவர் அதிகமாக நடித்து வந்தாலும் இந்திய அளவில் பான் இந்தியா ஸ்டாராக காணப்படுகிறார்.

ரொமாண்டிக் படத்தில் அறிமுகம்
கடந்த 2011ல் தெலுங்கில் நுவ்விலா என்ற நகைச்சுவை ரொமாண்டிக் படத்தில்தான் இவரது அறிமுகம் இருந்தது. ஆனால் தொடர்ந்து நடித்த யவடே சுப்ரமணியம் என்ற படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இதில் துணை கேரக்டரில்தான் நடித்திருந்தார். ஆனாலும் இந்தப் படம் இவரை ரசிகர்களிடையே சிறப்பாக கொண்டு சென்றது.

சிறப்பான படங்கள்
தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் இவரது கேரியர் பெஸ்ட்டாக உள்ளன. இதில் ராஷ்மிகாவுடன் நடித்திருந்த கீதா கோவிந்தம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்திலிருந்து இருவருக்கும் காதல் என தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

மௌனம் சாதிக்கும் விஜய் -ராஷ்மிகா
ஆனால் இவை குறித்தெல்லாம் இருவரும் வாய் திறக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர். அடுத்ததாக அனன்யா பாண்டேவுடன் இவர் நடித்துள்ள லைகர் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார் விஜய் தேவரகொண்டா. இந்த பிரமோஷன்களின்போது ராஷ்மிகாவுடன் காதல் என கூறப்படுவது குறித்து மனம் திறந்துள்ளார்.

காதல் கிசுகிசு ஓகேதான்
ராஷ்மிகாவுடன் காதல் என கிசுகிசுக்கப்படுவது தனக்கு ஓகேதான் என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். ஒரு பிரபலமாக இருப்பதால் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றும் கூறியுள்ளார். பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை அறிந்துக் கொள்ள அவரது ரசிகர்கள் காட்டும் ஆர்வமே இத்தகைய கிசுகிசுக்களை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான விஜய் தேவரகொண்டா
தன்னைப் பற்றி எந்த செய்தியும் வராமல் இருப்பதற்கு பதிலாக இதுபோன்ற கிசுகிசுக்கள் வருவது தனக்கு ஓகே என்று கூறியுள்ள விஜய் தேவரகொண்டா, இதன்மூலம் தன்னை பற்றி தொடர்ந்து ஆர்ட்டிகிள்கள் வரும் என்றும், ஆனால் தான் இதுகுறித்தெல்லாம் கவலை கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தெளிவாத்தான் இருக்கார்.

25ம் தேதி ரிலீசாகும் லைகர் படம்
விஜய் தேவரகொண்டா, பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் லைகர் படம் வெளியாகவுள்ளது. குத்துச் சண்டையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.