இத்தாலியின் பிரபல வங்கி ஒன்றை கொள்ளையடிக்க 4 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டதாகவும் இந்த கும்பல் வங்கியை கொள்ளையடிக்க சுரங்கம் தோண்டியதாகவும் கூறப்படுகிறது.
வங்கிக்கு எதிரே உள்ள கடையில் இருந்து வங்கி வரை சுரங்கம் தோண்டி கொண்டிருந்த போது ஏற்பட்ட விபரீதம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இத்தாலி காவல்துறை விசாரணை செய்தபோது பல ஆச்சரியமான, அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.
6 லட்சம் கோடியை தொட்ட ஐசிஐசிஐ வங்கி.. எலைட் கிளப்-ல் சேர்ந்தாச்சு..!
வங்கிக்கொள்ளை
இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபல வங்கியில் கொள்ளை அடிக்க திட்டமிட்ட நான்கு பேர் கொண்ட குழு, அந்த வங்கிக்கு எதிரே உள்ள மூடப்பட்ட கடையிலிருந்து சுரங்கம் தோண்ட முடிவு செய்தனர். அமெரிக்கா உட்பட பல நாடுகளில் கிறிஸ்மஸ் கொண்டாடுவது போல இத்தாலி நாட்டில் ஒரு முக்கிய திருவிழா கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக இத்தாலி தலைநகரில் உள்ள தெருக்கள் அனைத்தும் அமைதியாக இருந்த போது ஒரு மர்ம கும்பல் வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
சுரங்கம்
வங்கியை கொள்ளையடிக்க அந்த வங்கிக்கு எதிரே உள்ள மூடிய கடையில் இருந்து சுரங்கம் தோண்டுவது தான் அவர்களுடைய திட்டமாக இருந்தது. சுரங்கம் தோண்டி அந்த வங்கிக்கு சென்று கொள்ளையடித்து விட்டு மீண்டும் சுரங்கம் வழியாக தப்பி செல்ல வேண்டும் என்பது அவர்களது திட்டம் ஆகும்.
20 அடி ஆழம்
இந்த திட்டத்தை செயல்படுத்த மூடிய கடையில் இருந்து சுமார் 20 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டப்பட்டது. 4 கூட்டாளிகளில் இருவர் சுரங்கப் பாதையை தோண்டி கொண்டு இருந்தனர் என்பதும் மீது இரண்டு பேர் தோண்டப்பட்ட மண்ணை வெளியேற்றி கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.
மண் சரிவு
இந்த நிலையில் சுரங்கம் தோண்டி கொண்டிருந்தபோது திடீரென மண் சரிந்து சுரங்கம் தோண்டி கொண்டு இருந்தவர்களின் மீது மண் சரிந்து விழுந்ததால் அவர்கள் இருவரும் சரிந்த மண்ணால் மூடப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய இருவரின் அலறல் குரல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதலில் ஒருவரை மீட்டனர். இன்னொருவர் படுகாயத்துடன் மீட்கப்ட்டார்.
சுற்றி வளைப்பு
மேலும் இந்த கொள்ளைக்கு உடந்தையாக வெளியே இருந்து மண்ணை வெளியேற்றி கொண்டிருந்த இருவர் காரில் தப்பி செல்ல முயன்ற போது அவர்கள் இருவரும் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மருத்துவமனை
இந்த நிலையில் இடிபாடுகளுக்குள் மீட்கப்பட்ட ஒருவருக்கு எந்தவித காயமும் இல்லாத நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் இன்னொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது நிலைமை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விசாரணை
இந்த நிலையில் சுரங்கம் தோண்டியவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கைது செய்யப்பட்டவர்களில் இருவர் கூறினாலும் அவர்களிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். வங்கியை கொள்ளையடிக்க சுரங்கம் தோண்டியது உறுதி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் இந்த கொள்ளைக்கும் சம்பந்தம் உண்டா என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Italian Man Digs Tunnel To Rob A Bank, Gets Buried 20 Feet Below The Ground
Italian Man Digs Tunnel To Rob A Bank, Gets Buried 20 Feet Below The Ground | வங்கியை கொள்ளையடிக்க சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள்.. பிறகு நடந்த விபரீதம்!