விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து உயர்கல்வி மூலம் குடும்பத்தை உயர்த்த நினைத்த மாணவி தற்போது சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்பட்டு வருகிறார்.
ரம்யா எனும் 17 வயது மாணவி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சூர்யா கல்லூரியில் நர்சிங் பயின்று வந்துள்ளார். இவரது கனவு பெரியதல்ல. ஆனால், யதார்த்தமானது. தன்னையும் தனது குடும்பத்தையும் கடந்து இந்த சமூகத்தையும் நேசிப்பவர்களின் விருப்பம்தான் மருத்துவத்துறை. இந்த துறையில் பயின்று மருத்துவம் குறித்து அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவலுடன் கல்லூரி சேர்ந்து பயின்று வந்துள்ளார். நாம் சிறு வயதில் ஆசிரியரிடம் “டாக்டராக வேண்டும், கலெக்டெர் ஆக வேண்டும்” என சொன்னாலும் யதார்த்த வாழ்க்கை அதற்கான வசதி வாய்ப்புகளை எல்லோருக்கும் வழங்கி விடுவதில்லைதானே?
அந்த வகையில் மருத்துவர் கனவை சுமந்து நனவில் நர்சிஸ் கோர்ஸ் பயின்று வருகிறார் மாணவி ரம்யா. ஆனாலும் தீப்பொறி சிறியது என்றாலும் அது தீ தானே? அந்த வகையில் சிறப்பாக படிப்பில் கவனம் செலுத்தி வர சில நாட்களுக்கு முன்னர் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று நடந்து அவரது வாழ்க்கையே புரட்டிப்போட்டுவிட்டது. அந்த நாளில் ரம்யாவுக்கு நினைவிருந்ததெல்லாம் ஒன்று ஒன்றுதான். அவள் தண்ணீர் குடிக்க கல்லூரியின் முதல் மாடிக்கு சென்றதுதான் அது.
அடுத்தடுத்த சில நிமிடங்களில் ரம்யாவின் வீட்டுக்கும், மருத்துவமனைக்கும் அழைப்புகள் பறந்துள்ளன. தண்ணீர் குடிக்கச் சென்ற ரம்யா கால் இடறி கீழே விழுந்துவிட்டாள். இந்த செய்தியை கேட்ட அவளது தாய் என்ன செய்வதென்று தெரியாமல் பதறியடித்து கல்லூரிக்கு ஓடியுள்ளார். கல்லூரிக்கும் ரம்யாவின் வீட்டுக்கும் இடையே 15 கி.மீ. ஆனால் ரம்யாவின் கனவுக்கு இது ஒன்றும் பெரிய தூரம் இல்லை. கல்லூரிக்கு வந்த தாய், மகளை உடனடியாக கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
15 கி.மீ தொலைவில் இருந்த தாய்க்கே இவ்வளவு பதட்டம் எனில், பல்லாயிரம் கி.மீ தொலைவில் பாலைவனத்திற்கு நடுவே கட்டுமான தொழில் செய்து வரும் ரம்யாவின் தந்தைக்கு இந்த செய்தி எவ்வளவு பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கும்? தனது மகளின் இந்த நிலையை உணர்ந்து துபாயிலிருந்து எப்படியோ உடனடியாக புறப்பட்டு வந்தார் ரம்யாவின் அப்பா. ரம்யாவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மருத்துவர்கள் பரிசோதித்ததில் மாணவிக்கு பல எலும்புகள் உடைந்திருப்பது கண்டறியப்பட்டது.
மட்டுமல்லாது நுரையீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ரம்யா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக ரம்யாவுக்கு சுயநினைவு இருக்கிறது. ஆனால் அவளுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு குடும்பத்தினரிடம் பணம் இல்லை. பணம் இருந்து நல் மனம் இருப்பவர்கள் ரம்யா தனது கனவை தொடர அவளுக்கு உதவுங்கள். இந்த உலகம் ஒன்றுதான், இதற்கு அடுத்து சொர்க்கம், மறுபிறவி என இருக்கிறதா என்றெல்லாம் நிச்சயமாக தெரியாது.
ஆனால் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு ‘உதவி’ செய்வதன் மூலம் நாம்மால் மற்றொரு வாழ்க்கையை வாழ முடியும். அந்த வாழ்க்கையில் கிடைக்கும் மன நிம்மதி வேறெதிலும் கிடைப்பதில்லை. உதவு செய்யுங்கள். அதையும் உடனே செய்யுங்கள்.
நீங்கள் மனது வைத்தால் இந்த மாணவிக்கு உடனே ஆப்ரேஷன் செய்ய முடியும். இந்த லிங்கை கிளிக் செய்து உடனே அந்த மாணவிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்து, இந்த மாணவிக்கு சிகிச்சைக்கு பணம் திரட்ட உதவிடுங்கள்!
மாணவிக்கு உதவி செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.