இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் ஒன்றான விப்ரோ அதன் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு வேரியபிள் பே நிறுத்த முடிவு செய்துள்ளது.
பேரியபிள் பே என்பது ஒரு ஊழியரின் சம்பளத்தில் கணிசமான பகுதியை அந்த ஊழியரின் செயல் திறன் அடிப்படையில் அளிக்கப்படும் தொகை.
இந்தியாவின் புதிய ‘EMS HUB’ ஆக மாறும் தமிழ்நாடு.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்..!

வேரியபிள் பே
இது மொத்த சம்பளத்தில் ஒரு பகுதி என்பதால் வேரியபிள் பே குறையும் போது ஊழியர்களுக்குக் கையில் கிடைக்கும் சம்பளம் குறையும். மேலும் வேரியபிள் பே பெரும்பாலும் காலாண்டு அடிப்படையில் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கும். ஆனால் சில நிறுவனங்களில் மாத அடிப்படையிலும் அளிக்கப்படுகிறது.

விப்ரோ
விப்ரோ நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு வேரியபிள் பே நிறுத்த முடிவு செய்த நிலையில் புதிய மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு 30 சதவீத பிடிக்கப்பட்ட பின்பு வேரியபிள் பே தொகையை அளிக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது.

மின்னஞ்சல்
இதுகுறித்து விப்போ தனது விளக்க அனுப்பிய மின்னஞ்சலில் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அழுத்தம் காரணமாக வேரியபிள் பே குறைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்
விப்ரோ தனது சி பேண்ட் மற்றும் மூத்த ஊழியர்களுக்கு வேரியபிள் பே பெறமாட்டார்கள் என்று மின்னஞ்சல் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஏ மற்றும் பி பேண்டுகளில் உள்ள பணியாளர்கள் வேரியபிள் பே இலக்குத் தொகையில் 70 சதவீதத்தைப் பெறுவார்கள் என்று விப்ரோ நிறுவனத்தின் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் மாத சம்பளம்
மேலும் இந்த வேரியபிள் பே குறைப்பை விப்ரோ ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத இறுதியில் கிடைக்கும் மாதாந்திர ஊதியம் குறைக்கப்படும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் இந்தியாவில் முதலாவதாக விப்ரோ தனது ஊழியர்களின் வேரியபிள் பே-வை கட் செய்துள்ளது.

இலக்கை அடையத் தவறியது
விப்ரோ நிறுவனத்தில் டீம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்கை அடையத் தவறியதை அடுத்து, வேரியபிள் பே ஊதியத்தை நிறுத்தி வைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் கூறியது.

காலாண்டு மார்ஜின்
talent supply chain-ல் திறமையின்மை, ப்ராஜெக்ட் மார்ஜின்ஸ் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தீர்வுகளில் முதலீடுகள் ஆகியவற்றில் முதல் காலாண்டில் மார்ஜின் 15 சதவீதமாகக் குறைந்து இருப்பதால் இந்தச் சம்பள குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

செப்டம்பர் 1 குட் நியூஸ்
இதே இமெயிலில் செப்டம்பர் 1ஆம் தேதி அளிக்கப்படும் சம்பள உயர்வில் எவ்விதமான மாற்றமும் பாதிப்பும் இருக்காது எனவும் விப்ரோ தெரிவித்துள்ளது விப்ரோ ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கையை அளித்துள்ளது.
கோவில்பட்டி-க்கு ஜாக்பாட்.. தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!
Wipro cancels variable pay for mid and senior-level employees; Check the reason
Wipro cancels variable pay for mid and senior-level employees; Check the reason விப்ரோ ஊழியர்களின் சம்பளம் கட்.. திடீர் நடவடிக்கை எதற்காக..?!