இந்திய டெலிகாம் சந்தை பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் பல வருடங்களாகச் சந்தையில் கொடிகட்டிப் பறந்த வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் புதிதாக வந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தைச் சமாளிக்க ஒன்றாக இணைந்தது.
ஆனாலும் போட்டியை சமாளிக்க முடியாமலும், அதிகப்படியான நிலுவை தொகை வைத்துள்ள காரணத்தாலும் தொடர்ந்து வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் இழந்து வருகிறது. இதனால் வோடபோன் ஐடியா எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
நடுத்தர மக்களை விடாமல் துரத்தும் கடன் செயலிகள்.. புதிய ஐடியா.. மக்களே உஷார்..!

ரிலையன்ஸ் ஜியோ
ஜூன் மாதம் இந்தியாவின் 2 பழைய டெலிகாம் நிறுவனங்களைக் காட்டிலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ புதிதாக 42.2 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 413.01 மில்லியனாக உயர்ந்துள்ளது.

பார்தி ஏர்டெல்
இதே காலகட்டத்தில் பார்தி ஏர்டெல் 7.9 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்து தனது மொத்த வாடிக்கையாளர் கூட்டத்தை 362.96 மில்லியனாக உயர்த்தியுள்ளது. ஆனால் 3வது பெரிய தனியார் டெலிகாம் சேவை நிறுவனமான வோடபோன் ஐடியா நிறுவனம் ஜூன் மாதத்தில் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

வோடபோன் ஐடியா
ஜூன் மாதத்தில் அதிகப்படியான நிதி நெருக்கடியில் இருக்கும் வேளையில் வோடபோன் ஐடியா நிறுவனம் 18 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன் மூலம் வோடபோன் ஐடியாவின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 256.64 மில்லியனாகக் குறைந்துள்ளது.

4ஜி சேவை, 5ஜி சேவை
வோடபோன் ஐடியா நிறுவனம் இந்தியா முழுவதும் வைத்திருக்கும் 4ஜி சேவையில் வாடிக்கையாளர்களைப் பெறுவதில் கடுமையாகப் போராட்டத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றையில் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளது.

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்
இந்த 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் வோடபோன் ஐடியா சுமார் 18,784 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,668 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைப் பெற்றுள்ளது. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மொத்த 72.098 GHz அலைக்கற்றை விற்பனைக்கு வைக்கப்பட்ட நிலையில் நான்கு நிறுவனங்கள் பங்கேற்று 51.236 GHz அலைக்கற்றை மட்டுமே வாங்கப்பட்டது.

நிதி நெருக்கடி
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதிகத் தொகையை முதலீடு செய்துள்ள வோடபோன் ஐடியாவின் நிதி சுமை மேலும் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் நிர்வாகம் செய்யப் போதுமான நிதியை திரட்டுவதில் கூடுதல் சுமையும் உருவாகும். இதேபோல் வோடபோன் ஐடியாவின் ஆக்டிவ் வாடிக்கையாளர் அளவு 85.2 சதவீதமாக மட்டுமே உள்ளது.

மத்திய அரசு
வோடபோன் ஐடியா ஏற்கனவே பெரிய அளவிலான பங்குகளை இந்நிறுவனத்தின் நிலுவை தொகையை ஈடு செய்ய மத்திய அரசிடம் கொடுத்துள்ள நிலையில், புதிய நிதி சுமையும், நிதி தேவையும் இந்நிறுவனத்தின் வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதிக்க உள்ளது.
சரி வோடபோன் ஐடியா சேவையின் தரம் எப்படி இருக்கு..? கமெண்ட் பண்ணுங்க..
vodofone Idea user base shrinks continously, Struggle to gain 4g Users
vodofone Idea user base shrinks continously, Struggle to gain 4g Users வீழும் சூரியனாக வோடபோன் ஐடியா.. இனி அவ்வளவு தானா..?