புதுடெல்லி: வெளிநாட்டவர்கள் தொழில் சார்ந்து புலம்பெயர்வதற்கு ஏற்றதாக உருவாகி வரும் உலக நகரங்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூரு ஆறாவது இடத்தில் உள்ளது.
முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும் சொகுசு வாழ்க்கைக்கான சூழல் நிலவுவதாலும் பெங்களூரு வெளிநாட்டவர்களுக்கு ஏற்ற நகரமாக உருவாகி வருவதாக புளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.
பெங்களூருவில் நிறுவனம் தொடங்கி இருக்கும் அமெரிக்கர் ஒருவர் கூறுகையில், ‘‘என் மனைவி, பிள்ளைகளை அமெரிக்காவில் விட்டுவிட்டு, தொழில் தொடங்க பெங்களூருக்கு வந்துள்ளேன். தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் இங்கு நிலவுகிறது. இந்நகரில் தொழில் செய்வது எனக்கு நிறைவானதாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.