மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின், 10குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு ஒரு மில்லியன் ரூபிள் பரிசு (ரூ.13 லட்சம் ) வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் குழந்தை பெறும் பெண்களுக்கு மதர் ஹரோயின் என்ற பட்டம் வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.
நாட்டில் ஜனத்தொகையை பெருக்க ரஷிய அதிபர் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்று வளர்க்கும் பெண்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம் பரிசு மற்றும் ‘மதர் ஹீரோயின்’ பட்டம் வழங்கப்படும் என்றும் அறிவித்துஉள்ளார். அதாவது, தகுதிபெறும் தாய்மார்களுக்கு அவர்களின் 10வது குழந்தைக்கு ஒரு வயது ஆனதைத் தொடர்ந்து 1 மில்லியன் ரூபிள் (சுமார் ₹13,12,000 அல்லது $16,000) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினால் இரண்டாம் உலகப் போரின் போது பாரிய மக்கள் தொகை இழப்புகளை அடுத்து 1944 ஆம் ஆண்டில் இந்த மதர் ஹீரோயின் கௌரவப் பட்டம் முதன்முதலில் நிறுவப்பட்டது. ஆனால், 1991ல் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பிறகு, பட்டம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இப்போது, மீண்டும் ’அம்மா நாயகி’ பட்டம் வழங்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், போரிலோ அல்லது பயங்கரவாதச் செயல் அல்லது அவசரகாலச் சூழ்நிலையிலோ தங்கள் குழந்தைகளை இழந்தாலும், அந்த தாய் தகுதி பெறுவார் என்று ஆணை கூறுகிறது. தாய் நாயகி பட்டம் ரஷ்யாவின் ஹீரோ மற்றும் தொழிலாளர் நாயகன் போன்ற உயர்தர மாநில உத்தரவுகளின் அதே நிலை மட்டத்தில் கருதப்படுகிறது.
இதுதொடர்பான சட்டத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் கையொப்பமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவின் மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்ள ‘கார்டினல்’ நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்த ரஷ்ய ஜனாதிபதி, ஜூன் 1 அன்று ரஷ்யாவின் குழந்தைகள் தின விடுமுறையில் தாய் நாயகி பட்டத்தை நிறுவ முன்மொழிந்தபோது, பெரிய குடும்பங்கள் சமூகத்தில் படிப்படியான மறுமலர்ச்சியைக் கண்டதாக தெரிவித்து உள்ளார்.