அதிமுகவின் பொதுக்குழு வழக்கில் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பவழங்கியது. இந்த தீர்ப்பில் பொதுக்குழுவின் முடிவுகள் செல்லாது என அறிவித்திருத்தது. அதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளர் ஆனது மற்றும் ஓ. பன்னீர்செல்லவத்தை கட்சியை விட்டு விலகி வைத்தது போன்ற முக்கிய முடிவுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றுபட வேண்டும். சசிகலாவும் , தினகரனும் வந்தால் கட்சியில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். மேலும், சின்னமாவும், தினகரனும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து எனக்கு எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், அவை தொலையட்டும், இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என தெரிவித்திருந்தார்.
மேலும் அதிமுகவில் இணைய ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமிக்கும் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அவரது அழைப்பை ஈபிஎஸ் தரப்பு நிராகரித்துள்ளது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழு தீர்ப்பையும் மேல்முறையீடு செய்வதாகவும் ஈபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.