63வது பிறந்தநாள் நாள் கொண்டாடும் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி முதல் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்ப்போம்.
ஆனால் டிவிட்டரில் இன்று காலை முதல் மத்திய நிதியமைச்சர் பெயர் டிரெண்ட் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் டிரெண்டாகி வருகிறது.
அனில் அம்பானி-க்கு 2 வருடத்திற்கு பின் விடிவுகாலம்.. கைகொடுத்த முகேஷ் அம்பானி..!
நிர்மலா சீதாராமன்
2014 பாஜக அரசு அமைக்கும்போது நிர்மலா சீதாராமன் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சராகப் பதவியேற்றார், ஆனால் 2017ல் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேறியதில் இருந்து பெரிய அளவில் பிரபலமானார்.
இந்திரா காந்தி
2019ஆம் ஆண்டு நிதியமைச்சராகப் பதவியேறினார் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற அரிய பெருமையைப் பெற்றுள்ளார். இந்திரா காந்திக்குப் பின்பு பாதுகாப்பு அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் இருப்பவர் தான் நிர்மலா சீதாராமன்.
மதுரை
சீதாராமன் ஆகஸ்ட் 18, 1959 இல், தமிழ்நாட்டில் மதுரையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை நாராயண் சீதாராமன் ரயில்வே துறையில் பணியாற்றி வந்தார். இவரது தாயாரின் பெயர் சாவித்ரி சீதாராமன்.
கல்வி
மத்திய அரசின் அமைச்சரவையில் முக்கியப் பதவியில் இருக்கும் நிர்மலா சீதாராமன், திருச்சிராப்பள்ளியில் உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் 1984 ஆம் ஆண்டு ஜேஎன்யூவில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார், மேலும் இந்தியா-ஐரோப்பிய ஜவுளி வர்த்தகம் குறித்த ஆய்வறிக்கையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
லண்டனில் Saleswoman
அரசியலுக்கு வரும் முன்பு, சீதாராமன் தனது கணவர் பரகலா பிரபாகருடன் லண்டனில் வசித்து வந்தார், அங்கு அவர் Saleswoman ஆகப் பணியாற்றினார். அவர் சில காலம் லண்டனில் உள்ள வீட்டு அலங்காரக் கடையான Habitat இல் பணிபுரிந்துள்ளார். பின்னர், அவர் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸில் (PWC) மூத்த மேலாளராக (ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு) சேர்ந்தார். சீதாராமனும் சில காலம் பிபிசியில் பணியாற்றியுள்ளார்.
பொற்காலம்
1991 இல் இந்தியாவின் பொருளாதாரப் பயணத்தின் பொற்காலம் தொடங்கிய வேளையில் நிர்மலா சீதாராமன் இந்தியா திரும்பினார். இந்தியா வந்த கையோடு பிஜேபி கட்சியின் முத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்தின் கீழ் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளராக ஆனார்.
பள்ளி
நிர்மலா சீதாராமன் பின்தங்கிய குழந்தைகளுக்கான பள்ளியை, கொள்கை ஆராய்ச்சி மையத்துடன் நிறுவியுள்ளார். ஹைதராபாத்தில் பிரணவ பள்ளியை நிறுவினார்.
அடல் பிஹாரி வாஜ்பாய்
அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ.) ஆட்சியின் போது, நிர்மலா சீதாராமன், தேசிய மகளிர் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். NCW அமைப்பில் 2003 முதல் 2005 வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
சமாளிக்க முடியாது.. ஜப்பான் முடிவால் விளாடிமிர் புதின் ஹேப்பி..!
Happy Birthday Finance minister lesser known facts about Nirmala Sitharaman
HBD Finance minister lesser known facts about Nirmala Sitharaman | Nirmala Sitharaman-க்கு 63வது பிறந்தநாள்.. மதுரை டூ லண்டன்.. வர்த்தகத் துறை டூ நிதித் துறை..!