குழந்தைகள் முதல் பெரியோர் வரையில் அனைவரும் விரும்பும் ஒரு உணவு சான்ட்விச். பார்க்கும்போதே அதனை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தினை தூண்டும் சான்ட்விச்களை பிடிக்காது என்று சொல்பவர்கள் குறைவு.
அப்படி ஆசை ஆசையாய் வாங்கிய சான்ட்விட்சை சாப்பிட நினைத்த இங்கிலாந்து பெண்ணுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
இங்கிலாந்தின் கஃபோல்க்கைச் சேர்ந்த 21 வயதான இளம் கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும், தாங்கள் ஆசை ஆசையாய் சப்வேயில் சான்ட்விச் ஒன்றை ஆர்டர் செய்துள்ளனர்.
சப்வே நிறுவனத்தை வாங்கும் ரிலையன்ஸ் ரீடைல்.. முகேஷ் அம்பானி-யின் மாஸ்டர் பிளான்..!
சான்ட்விச்சில் கத்தி
அப்படி வாங்கிய சான்ட்விச்சை சாப்பிடும்போது அதில் கத்தி இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நெரிஸ் மோய்ஸ் என்ற அந்த இளம் பெண், இரண்டு ஞாயிற்றுகிழமைகளுக்கு முன்பு, அருகிலுள்ள சப்வேயில் சான்ட்விட்சினை ஆர்டர் செய்துள்ளார். அதனை சாப்பிட நினைக்கும்போது அதில் ஏதோ விபரீதமாக இருப்பதையும் உணர்ந்துள்ளார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
அவர் சந்தேகப்பட்டதைப் போலவே அந்த சான்ட்விச்சில், மஞ்சள் கைப்பிடியுடன் கூடிய கத்தி ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதற்காக அந்த சான்ட்விச் டெலிவரி செய்த சப்வேயில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.
பேஸ்புக்கில் வீடியோ
அதனை பேஸ்புக்கில் வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சான்ட்விட்சின் அடியில் உள்ள கத்தியினை காட்ட, அதன் மேல் உள்ள உணவு பொருட்களை அகற்றுவதையும் பார்க்க முடிகிறது. மோய்ஸ் தற்போது 17 வார கர்ப்பிணி பெண். மோய்ஸ் உடன் அவரது பார்ட்னர் ஹார்லி கில்ட்ராயும் இருந்துள்ளார்.
மஞ்சள் கத்தியை இழந்துவிட்டீர்களா?
கர்ப்பிணி பெண் ஆன மோய்ஸ், தான் பசியுடன் இருப்பதை உணர்ந்த நிலையில், அவரது கணவர் சப்வேயில் சான்ட்விச் ஆர்டர் செய்துள்ளார். அதன் பிறகு டெலிவரி செய்யப்பட்ட சான்ட்விச்சில் தான் கத்தி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதன் பிறகு அந்த பிரபல உணவு சங்கிலி நிறுவனத்தித்திற்கு கால் செய்து,நீங்கள் ஒரு மஞ்சள் கத்தியினை இழந்து விட்டீர்கள். நீங்கள் உண்மையிலேயே கவனமாக இருக்கிறீர்களா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
விசாரணை
ஞாயிற்றுகிழமை என்பதால் ஊழியர்களுக்கு விடுமுறையாக இருக்கும். அதனை நான் புரிந்து கொள்கிறேன். எனினும் இருக்கும் ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டாமா? என மோய்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில் இந்த சம்பவம் நிர்வாகம் வரையில் சென்று, இது குறித்து விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்களாம்.
UK Pregnant woman finds knife in her subway sandwich
UK Pregnant woman finds knife in her subway sandwich/சப்வே சான்ட்விட்ச்-ல் இதெல்லாம் கூட இருக்குமா.. அதிர்ச்சியான UK பெண்!