Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
இபிஎஸ் தேர்வு செல்லாது.. நீதிமன்றம் தீர்ப்பு
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது, அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதன்மூலம் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக எடப்படி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதும், ஓ.பன்னீா்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லாததாகியுள்ளது.
இனி தொண்டர்கள் தரப்புதான்.. ஓபிஎஸ்
அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து ஓபிஎஸ் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அனைவரையும் ஒருங்கிணைத்து எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல அதிமுகவை வலிமைப்படுத்துவோம். இனி, தொண்டர்கள் தரப்புதான். எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொண்டர்களின் விருப்பப்படியும், தமிழக மக்களின் நலன் கருதியும்தான் இருக்கும் என்றார்.
மோடி, ஸ்டாலின் சந்திப்பு
டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்டோரை நேரில் சந்தித்த நிலையில், புதன் கிழமை இரவு சென்னை திரும்பினார்.
முன்னதாக புதன்கிழமை மாலை 4 மணியளவில் பிரதமர் மோடியை, ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இதில் நீட் விலக்கு, புதிய கல்வி கொள்கை, காவிரி விவகாரம், மேகதாது அணை விவகாரம், முல்லைப் பெரியாறு, நதிநீர் இணைப்பு, கட்சத்தீவு மீட்பு, மீனவர்களுக்கான தேசிய ஆணையம், மின்சாரத் திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறுதல் போன்ற தேவைகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்களுக்கு இந்த சந்திப்பு நீடித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
கேரளாவில் அரசு சார்பில் இயக்கப்படும் ‘கேரளா சவாரி’ ஆன்லைன் டாக்சி சேவை புதன்கிழமை பயன்பாட்டிற்கு வந்தது. மாநில அரசே ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறை ஆகும்.
தமிழக டிஜிபி பெயரில் பரவும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களை டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை வழக்கில், கைதான சிறுமியின் தாய் சுமையா, இடைத்தரகர் மாலதி உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.