எளிய மக்களின் இன்றியமையாத பயண வாகனமாக திகழ்வது பேருந்துகள். அந்த பேருந்து கட்டணம் நடுத்தர மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு உயர்ந்தால் மக்களின் நிலை என்னாவாகும்?
இந்நிலையில் சில ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்து பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம்11 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
புகார் தெரிவித்த 97 பேரிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணம்ரூ.68,800 அவர்களிடமே திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதை தடுக்க சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார். ஆம்னி பேருந்துகளில் விழா காலங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்கும் வகையில் சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்…
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “ஆகஸ்ட் 12 ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தொடர் விடுமுறைகள் இருந்ததையடுத்துஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் வந்தது.
இதனை தொடர்ந்து போக்குவரத்து துறை ஆணையர்கள் தலைமையில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு 953 பேருந்துகளில் சோதனை மேற்க்கொண்டு புகார் தெரிவித்த 97 பேரிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணம் 68,800 திருப்பி கொடுக்கப்ட்டது.
மேலும் நேற்று முதல் தொடர் விடுமுறை என்பதால் நேற்று மாலை முதல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க பல்வேறு குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனர் . ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து கூடுதலாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதிக கட்டணம் வசூலித்து உரிமம் இல்லாத நான்கு ஆம்னி பேருந்துகளுக்கு 11 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஆம்னி பெயர்களில் கட்டண உயர்வை தடுக்கும் வகையில், போக்குவரத்து ஆணையர்களிடம் ஆய்வு கூட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தொடர்ந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடனும் கலந்து பேசிஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வை தடுக்கும் வகையில் சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஆட்டோவிற்கும் புதிய கட்டணம் நிர்ணய செய்யப்படும் எனவும், விரைவில் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தார். தீபாவளி, பொங்கல் விழாக்களில் கூடுதல் அரசு பேருந்து விடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். புதிதாக 500 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக 100 மின்னணு பேருந்துகளை வாங்குவதற்காக டெண்டர்கள் வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.