பெரு நாட்டின் தலைநகர் லிமாவில், காளை ஒன்று ஆக்ரோஷமாக கடைக்குள் புகுந்து பொருட்களை முட்டி சேதப்படுத்திய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இறைச்சி கூடத்திற்கு லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட அந்த காளை லாரியில் இருந்து தப்பித்து, ஆக்ரோஷமாக ஒரு நபரை துரத்திச் சென்றது.
பின்னர், ஒரு கடையின் வாசலில் இருந்த நாற்காலிகளை முட்டித்தள்ளிய காளை, கடைக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியது.
இதில் ஒரு நபர் காயமடைந்த நிலையில், பொதுமக்களை அச்சுறுத்திய காளையை அப்பகுதி மக்கள் 40 நிமிட போராட்டத்துக்கு பின் கால்களைக் கட்டி பிடித்தனர்.