திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு செயிண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவனை ஆசிரியை தாக்கியதால் மாணவனுக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெங்கட்ராமன் – சாந்தி தம்பதியின் 7 வயது மகனை, பள்ளியில் ஆசிரியை ஒருவர் கம்பால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
சிறுவனின் தலையில் வீக்கம் இருப்பதைக் கண்டு பெற்றோர் பள்ளிக்குச் சென்று கேட்ட போது, முறையாக பதில் அளிக்காத பள்ளி நிர்வாகம் டி.சி வாங்கிக் கொண்டு செல்லுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.