ஆண்களைவிட பெண்களுக்கே அதிக ‘sex partners' – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு தரவுகள்!

சராசரியாக 11 மாநிலங்களில் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக sex partners இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம் தங்கள் மனைவியுடனோ அல்லது உடன் வாழ்ந்தவர்கள் ஒருவருடனோ உடலுறவு கொண்ட ஆண்களின் சதவீதம் 4 சதவீதமாக உள்ளது என்கிறது NFHS தரவுகள். இதனுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 0.5 சதவீதம் மட்டுமே.
1.1. லட்சம் பெண்களையும், 1 லட்சம் ஆண்களையும் வைத்து தேசிய குடும்ப நல ஆய்வு இந்த ஆய்வை நடத்தியது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சராசரியாக ஆண்களை விட பெண்களின் sex partners எண்ணிக்கை அதிகமாக இருந்தது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், ஜம்மு & காஷ்மீர், லடாக், மத்திய பிரதேசம், அசாம், கேரளா, லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்தோர் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த மாநிலங்களில் ராஜஸ்தானில்தான் சராசரியாக 3.1% பெண்கள் அதிக sex partner-களை கொண்டுள்ளனர். அப்படி கணக்கிடுகையில் அங்கு ஆண்கள் 1.8% மட்டுமே. ஆனால் கடந்த 12 மாதங்களில் தங்கள் மனைவி அல்லது உடன் வாழ்பவர் ஒருவருடனோ உடலுறவு கொண்ட ஆண்களின் அளவு 4 சதவீதமாக உள்ளது. பெண்கள் 0.5 சதவீதமாக உள்ளனர்.
image
2019-21 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5இல், இந்தியாவிலுள்ள 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களில் இருந்து 707 மாவட்டங்களை ஆய்வு செய்தது. இந்த தேசிய அளவிலான அறிக்கையானது சமூக-பொருளாதார தரவுகள் மற்றும் பிற பின்னணி புள்ளிவிவரங்களையும் வழங்கியிருக்கிறது. இது புதிய கொள்கைகளை உருவாக்கவும், பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.