சென்னை: பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.11.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்தார். தொடர் விடுமுறையின் போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி, பொங்கல் விழாவின் போது கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன என கூறினார்.
