இந்தியாவில் ஹோம் டெலிவரி சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் அடுத்த எந்தத் துறையில் சேவையை அளிக்க வேண்டும் என்பதில் பல குழப்பம் இருக்கும் வேளையில் சமீபத்தில் சோமேட்டோ நிறுவனம் கைப்பற்றிய Blinkit நிறுவனம் புதிதாக ஒரு சேவை அறிமுகம் செய்துள்ளது.
இந்தச் சேவை முதலில் பார்ப்பார்களுக்கு வேடிக்கையாகத் தெரிந்தாலும், பலருக்கு வெளியில் சென்று செய்ய வேண்டிய முக்கியமான பணியை எளிதாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த வகையில் Blinkit நிறுவனம் தற்போது சோமேட்டோ இருக்கும் அனைத்து நகரங்களுக்கும் தனது சேவையை விரிவாக்கம் செய்து வரும் வேளையில் புதிதாக ஒரு சேவையை அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு மத்திய மின்சார துறை போட்ட தடை.. நிலுவை தொகை எவ்வளவு தெரியுமா..?
Blinkit தளம்
Blinkit தளத்தில் தற்போது பிரிண்ட் அவுட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே சென்று செய்யும் பணிகளை ஒவ்வொன்றாக இணையச் சேவையாக மாறி வரும் நிலையில் Blinkit பிரிண்ட் அவுட் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
பிரிண்ட் அவுட் சேவை
ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் சேவை தளமான Blinkit டெல்லியில் NCR பகுதியில் இந்தப் பிரிண்ட் அவுட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் சேவையின் கீழ் பிளாக் அண்ட் வொயிட் பிரிண்ட் அவுட்-க்கு ஒரு பக்கத்திற்கு 9 ரூபாயும், கலர் பிரின்ட் அவுட்-க்கு 19 ரூபாயில் சேவையைத் துவங்கியுள்ளது.
அப்லோடு
இந்தச் சேவையைப் பெற முதலில் வாடிக்கையாளர்கள் தங்களது தேவையான ஆவணங்களை Blinkit சேவை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின்பு டெலிவரி செய்யும் நபர் அந்த டாகுமென்ட்-ஐ 11 நிமிடத்தில் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டில் ஹோம் டெலிவரி செய்வார்கள்.
ஜிதேஷ் கோயல்
Blinkit இன் ப்ராடெக் மேனேஜர் ஜிதேஷ் கோயல் இந்த அறிவிப்பை Linkedln இல் தெரிவித்தார். ஜிதேஷ் பதிவில்,”பிளிங்கிட்டில் நாங்கள் இப்போது ஒரு சில பகுதிகளில் நிமிடங்களில் பிரிண்ட் அவுட் டெலிவரி சேவை வழங்குகிறோம். வீட்டில் ஒருபோதும் பிரின்டரை வைத்திருக்கவில்லை, சைபர் கஃபே அல்லது நூலகம் அல்லது அக்கம் பக்கத்தினர் அல்லது அலுவலகங்களில் இருந்து பிரிண்ட் அவுட் பெறுவது எப்போதுமே கடுப்பான வேலை தான், குறிப்பாக அவசரமாகத் தேவைப்படும் போது பெரும் பிரச்சனையாக இருக்கும்”. எனத் தெரிவித்துள்ளார்.
காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
பிளிங்கிட்டில் பிரிண்ட் அவுட் சேவைகள் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்தப் புதிய சேவையைப் பெறுவதற்குக் குறைந்தபட்ச ஆர்டர் தேவை எதுவும் இதுவரை நிர்ணயம் செய்யப்படாததால், பிரிண்ட் அவுட்களைப் பெற வாடிக்கையாளர்கள் மொத்த பிரின்ச் அவுட் எடுக்கக் காத்திருக்க வேண்டியதில்லை.
Blinkit சர்வர்
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக, பதிவேற்றப்பட்ட ஆவணங்கள் அச்சிடப்பட்டவுடன், Blinkit சர்வர்களில் இருந்து நீக்கப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
Blinkit announced new service to deliver printouts at your home doorstep just in 11 minutes
Blinkit announced new service to deliver printouts at your home doorstep just in 11 minutes இதைக் கூடவா டெலிவரி செய்வீங்க.. Blinkit நிறுவனத்தின் புதிய சேவை..!