இந்தியா சீனா மட்டும் அல்ல.. மியான்மரும் இனி அப்படி தான்.. கடுப்பில் மேற்கத்திய நாடுகள்!

இராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரும் தற்போது ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

கச்சா எண்ணெய் மட்டும் அல்லாது, ரஷயாவின் மற்ற எரிபொருள்களையும் இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது ரஷ்யாவுக்கு மேலும் சாதகமாக அமைந்துள்ளது. தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் சப்ளை சங்கிலியில் தாக்கம் ஏற்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டியது.

பெட்ரோல், டீசல் மீதான வரிக் குறைப்பு.. ஆனா சாமானிய மக்களுக்கு எவ்விதமான பயனுமில்லை..!

மேற்கத்திய நாடுகளின் கருத்து

மேற்கத்திய நாடுகளின் கருத்து

மேற்கத்திய நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை தடை செய்தன. எனினும் வளரும் நாடுகள் பலவும் ரஷ்யாவிடம் எந்த பிரச்சனையையும் கருத்தில் கொள்ளாமல் எண்ணெய் வாங்க தொடங்கின. இது குறித்து மேற்கத்திய நாடுகள் கடுமையான கருத்துகளை கூறி வந்தாலும், அதனை எதையும் கருத்தில் கொள்ளவில்லை.

மியான்மரும் இறக்குமதி

மியான்மரும் இறக்குமதி

ஆரம்பத்தில் முதல் முறையாக பல பிரச்சனைகளுக்கும், எதிர்மறை கருத்துகளுக்கும் மத்தியில், இந்தியா தான் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்-ஐ ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்ய தொடங்கியது. அதன் பிறகு டிராகன் தேசமான சீனாவும் இறக்குமதி செய்யத் தொடங்கியது. ஜப்பானும் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. .இப்படி ஒவ்வொரு நாடுகளாக ரஷ்யாவின் பக்கம் சாய்ந்து வரும் நிலையில், தற்போது அந்த பட்டியலில் மியான்மரும் சேர்ந்துள்ளது.

மியான்மரின் மீது ஏற்கனவே தடை
 

மியான்மரின் மீது ஏற்கனவே தடை

உலகளவில் நிலவி வரும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், மியான்மரின் இந்த முடிவானது பெரும் மேற்கத்திய நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஏற்கனவே மேற்கத்திய நாடுகளின் தடையின் கீழ் இருந்த மியான்மர், தற்போது ரஷ்யாவின் பக்கம் சாய்ந்துள்ளது மேலும் அதிப்ருதியான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளின் திட்டம்

மேற்கத்திய நாடுகளின் திட்டம்

ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக எப்படியேனும் தனிமைப்படுத்தி, தங்களுக்கு அடிபணிய வைக்க வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகள் எண்ணம், கொஞ்சம் கொஞ்சமாக கண் முன்னேயே தவிடுபொடியாகி வருகின்றது.

ஆரம்பத்தியில் ரஷ்யாவின் மிகப்பெரிய இறக்கமதியாளராக இருக்கும் ஐரோப்பா தடை செய்தாலே, ரஷ்யா வழிக்கு வந்து விடும் என தப்பு கணக்கு போட்ட நாடுகள், ஐரோப்பிய நாடுகள் படிபடியாக இறக்குமதியினை குறைக்கும் என்றும் கூறின. ஆனால் இது அவர்களுக்கே பிரச்சனையாக மாறும் என்று அவர்கள் அப்போது நினைத்திருக்க மாட்டார்கள்.

எதற்கும் அஞ்சாத ரஷ்யா

எதற்கும் அஞ்சாத ரஷ்யா

ஆனால் ரஷ்யாவோ இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என தொடர்ந்து முன்னேற்ற பாதைக்கு செல்ல தொடங்கியுள்ளது. ஆரம்பத்தியில் சற்று தடுமாற்றத்தினை கண்டாலும், தற்போது படிப்படியாக வணிகத்தினை மேம்படுத்த தொடங்கியுள்ளது.

மேலும் சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சர்வதேச சந்தையில் விலை பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளது. இன்று சற்று குறையத் தொடங்கியிருந்தாலும், ஐரோப்பிய நாடுகள் தற்போது புதிய இறக்குமதியாளர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளன.

மியான்மருக்கு பயன்

மியான்மருக்கு பயன்

மியான்மரின் தேவையை பொறுத்து நியாயமான விலையில் எரிபொருளை வாங்க, மியான்மர் பரீலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மர் ஏற்கனவே எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின் வெட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த விலையில் இறக்குமதி செய்வது அதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Myanmar imports oil from Russia

Myanmar imports oil from Russia/இந்தியா சீனா மட்டும் அல்ல.. மியான்மரும் இனி அப்படி தான்.. கடுப்பில் மேற்கத்திய நாடுகள்!

Story first published: Friday, August 19, 2022, 11:49 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.