ஜப்பான் நாட்டு மக்களிடையே மது அருந்தும் பழக்கம் என்பது குறைந்துள்ளதால், அந்த நாட்டின் வரி வருவாய் சரிவினைக் கண்டுள்ளது. இதனால் வருவாயினை அதிகப்படுத்தும் நோக்கில் அந்த நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இதற்கிடையில் தான் சேக் விவா என்ற பிரச்சாரத்தையும் ஜப்பான் அரசு தொடங்கியுள்ளது.
சமாளிக்க முடியாது.. ஜப்பான் முடிவால் விளாடிமிர் புதின் ஹேப்பி..!

குடிபழக்கத்தினை அதிகரிக்க திட்டம்
இந்த பிரச்சாரத்தில் 20 வயதில் இருந்து 39 வயதுள்ள ஜப்பானியர்களின் குடிப்பழக்கத்தினை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று மக்களிடமே யோசனைகளை கேட்டு வருகின்றதாம்.
இவ்வாறு குடிக்க வைக்க சிறந்த ஐடியாக்களை வழங்குபவர்களுக்கு பரிசு மற்றும் விருது வழங்கி கவுரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் மாற்றம்
இது குறித்து ஒரு போட்டியும் செப்டம்பர் 9 அன்று நடத்தப்படவுள்ளது. கொரோனாவுக்கு பிறகு மக்களின் வாழ்க்கை முறையானது பெரிது மாற்றம் கண்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் மதுபழக்கம் குறைந்துள்ளது. இதனால் அரசின் வரி வருவாய் பெரிதும் சரிவினைக் கண்டுள்ளது.

31 ஆண்களில் இல்லாதளவுக்கு சரிவு
ஜப்பான் அரசின் வரி வருவாய் விகிதம் 2020ல் 110 பில்லியன் டாலருக்கு மேலாக இருந்தது. இது கொரோனாவால் பார்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டதால், மது விற்பனையும் சரிவினைக் கண்டுள்ளது. மக்கள் அத்தியவாசியம் தவிர மற்றவற்றிற்கு செலவு செய்வதை குறைத்துள்ளனர். இதனால் மது விற்பனை மூலம் கிடைத்த வரி வருவாய் 31 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.

அரசினை விமர்சனம்
ஜப்பான் அரசு இப்படி ஆரோக்கியமற்ற பழக்கத்தினை ஊக்குவிப்பதை சிலர் விமர்சனம் செய்தும் வருகின்றனர். சிலர் வரி வசூலை பொறுத்தவரையில் ஆரோக்கியம் என்பது ஒரு பொருட்டல்ல என நான் நினைக்கிறேன் ஒரு சமூக ஊடக பயனர் தெரிவித்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இளைஞர்கள் குடிக்காமல் இருப்பது நல்ல விஷயம் தானே. அரசாங்கம் ஏன் அவர்களை அடிமையாக்க நினைக்கிறது என்ற கருத்தினையும் பலரும் முன் வைத்துள்ளனர்.
ஆமா நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்.. உங்க கருத்தையும் பதிவிடுங்க
Japan wants young people to consume more alcohol: do you know why?
Japan wants young people to consume more alcohol: do you know why?/இளைஞர்களே தயவு செஞ்சு கொஞ்சம் குடிங்க.. கோரிக்கை விடுக்கும் ஜப்பான் அரசு..ஏன் தெரியுமா?