வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் நடந்து வரும் ஆம்ஆத்மி அரசு, ஊழலுக்கு துணை போகும் அரசாக உள்ளது. என மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கடுமையாக சாடினார்.
மதுபான கடை , விற்பனை உரிமம் உள்ளிட்ட மது பார் நடத்தும் லைசென்ஸ் புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ., இன்று தனது ரெய்டை துவக்கி உள்ளனர். இதில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு மற்றும் பல்வேறு அலுவலகங்களில் ரெய்டு நடந்து வருகிறது.இது பழிவாங்கும் உள்நோக்கம் கொண்டது என முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இதற்கு உடனடியாக பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருப்பதாவது:
டில்லியில் ஆம்ஆத்மி ஊழல் புகாரில் சிக்குவது புதிதல்ல, தற்போது மீண்டும் சிக்கி இருக்கிறது. சத்யேந்திர ஜெயின் சிறையில் அடைக்கப்பட்டார். இவரை இன்னும் சஸ்பெண்ட் கூட செய்யவில்லை. ஆம்ஆத்மி, கெஜ்ரிவால், சிசோடியாவின் உண்மையான முகம் மக்களுக்கு தெரிந்து விட்டது.
கலால் துறையில் முறைகேடு நடந்திருப்பதற்கு கல்வி துறையில் சிறந்து விளங்கினார் என்று சம்பந்தம் இல்லாத பதிலை காரணத்தை சொல்வது கேலியாக உள்ளது. மக்களை முட்டாளாக்க வேண்டாம் . மது பான விவகாரத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது. ஊழலை ஒழிப்போம் என்று கூறி அரசியலுக்கு வந்த ஆம்ஆத்மி கட்சியினர் இப்போது ஊழலில் சிக்கி உள்ளனர்.
ஊழல் இருப்பது தெரிய வந்துள்ளதால் தான் சிபிஐ விசாரணை நடக்கிறது. ஊழல் அற்றவர் என்று நிரூபிக்க எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இது வரை அவர் குற்றம் புரிந்தவர் தானே ! சிசோடியா ” எக்சைஸ் மினிஸ்டர் அல்ல அவர் எக்ஸ்கியூஸ் மினிஸ்டர் ஆகி விட்டார். இவ்வாறு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement