கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே இந்துக்கள் வாழும் பகுதியில் மதப்பிரச்சாரம், மதக் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மதம் சார்ந்த பாகுபாடு அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் மிக அதிகம் என்றாலும் தமிழ்நாட்டில் சற்றே ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கோவை அருகே வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே காடுவெட்டிபாளையம் என்ற கிராமத்தின் நுழைவு வாயிலில், இது இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி, இங்கு மதப் பிரசாரம் செய்யவும், மத கூட்டங்கள் நடத்தவும் அனுமதியில்லை, மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் இந்த அறிவிப்பு பலகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த அறிவிப்பு பலகையில் காவி மற்றும் மஞ்சள் நிறத்தில் நிறத்தில் எச்சரிக்கை என்ற பெரிய எழுத்துக்களுடன் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.