சென்னை:
விக்ரம்
நடித்துள்ள
‘கோப்ரா’
திரைப்படம்,
வரும்
31ம்
தேதி
திரையரங்குகளில்
வெளியாகிறது.
முன்னணி
நடிகரான
விக்ரம்,
கடந்த
சில
தினங்களுக்கு
முன்னரே
டிவீட்டர்
தளத்தில்
இணைந்தார்.
இந்நிலையில்,
‘கோப்ரா’
படம்
குறித்து
ட்வீட்டர்
ஸ்பேசில்
கலந்துரையாடினார்
நடிகர்
விக்ரம்.
கோலிவுட்டின்
தரமான
நடிகர்
வித்தியாசமான
நடிப்புக்கும்,
புதுமையான
முயற்சிகளுக்கும்
கொஞ்சமும்
தயங்காதவர்
நடிகர்
விக்ரம்.
கமலுக்குப்
பிறகு
அவரைப்
போன்ற
ஒரு
நடிகராக
இயக்குநர்கள்
கை
காட்டுவது
விக்ரமை
தான்.
இதற்கு
உதாரணமாக
காசி,
பிதாமகன்,
ஐ
போன்ற
படங்களைக்
கூறலாம்.
ஆரம்பத்தில்
சரியான
வாய்ப்புகள்
கிடைக்காத
விக்ரம்,
சேது
படத்திற்குப்
பின்னர்
தாறுமாறாக
சம்பவம்
செய்தார்.
அவருக்காக
பெரிய
ரசிகர்கள்
பட்டாளமே
உருவானது.

எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ள
கோப்ரா
‘ஐ
படத்திற்குப்
பின்னர்
விக்ரம்
நடித்த
திரைப்படங்கள்
அவருக்கு
ஏமாற்றத்தையே
கொடுத்தது.
இறுதியாக
விக்ரமின்
‘மகான்’
திரைப்படம்
சிறப்பான
வரவேற்பை
பெற்றாலும்,
அது
நேரடியாக
அமேசான்
ஓடிடியில்
வெளியாகிருந்தது.
இந்நிலையில்
விக்ரம்
நடிப்பில்
வரும்
31ம்
தேதி
வெளியாகவுள்ள
‘கோப்ரா’
படம்,
எதிர்பார்ப்பை
எகிற
வைத்துள்ளது.
பல
மாதங்களாக
படப்பிடிப்பில்
இருந்த
கோப்ரா,
வெளியாகுமா
என்றெல்லாம்
கூட
கேள்விகள்
எழுந்தன.

மிரட்டும்
கோப்ரா
கூட்டணி
டிமாண்டி
காலனி,
இமைக்கா
நொடிகள்
என
கவனம்
ஈர்த்த
அஜய்
ஞானமுத்து,
‘கோப்ரா’
படத்தை
இயக்கியுள்ளார்.
முக்கியமாக
ஏ.ஆர்.
ரஹ்மான்
இந்தப்
படத்திற்கு
இசையமைத்துள்ளது
பெரிய
பலமாக
அமைந்துள்ளது.
விக்ரமுடன்,
இர்ஃபான்
பதான்,
ஸ்ரீநிதி
ஷெட்டி,
கே.எஸ்.
ரவிக்குமார்
உள்ளிட்ட
பலர்
‘கோப்ரா’வில்
நடித்துள்ளனர்.
அதுமட்டும்
இல்லாமல்,
விக்ரம்
பலவிதமான
கெட்டப்களில்
நடித்துள்ளார்.

அதுக்காக
மட்டும்
வராதீங்க
இந்நிலையில்,
‘கோப்ரா’
படத்தின்
ப்ரோமோஷன்
நிகழ்ச்சியாக,
விக்ரம்,
இயக்குநர்
அஜய்
ஞானமுத்து
ஆகியோர்,
டிவிட்டர்
ஸ்பேசில்
ரசிகர்களுடன்
கலந்துரையாடினர்.
அப்போது
பேசிய
விக்ரம்,
“நான்
பல
கெட்டப்களில்
நடித்துள்ளதால்,
அதை
மட்டும்
நம்பி
படம்
பார்க்க
வர
வேண்டாம்.
இது
அதை
மட்டும்
சார்ந்து
எடுக்கப்படவில்லை
என்றும்,
கோப்ரா
எமோஷனல்
ட்ராமாவாக
இருக்கும்,
அது
அனைத்து
ரசிகர்களையும்
கவரும்”
எனத்
தெரிவித்துள்ளார்.
அவரின்
இந்த
கருத்து,
ரசிகர்களை
யோசிக்க
வைத்துள்ளது.