ஐதராபாத் : மணிரத்னத்தின் கனவு ப்ராஜெக்டாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். வரும் செப்டம்பர் 30ம் தேதி படம் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் டீசர், பொன்னி நதி பாடல் பிரம்மாண்டமாக சென்னையில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் இந்தப் படத்தின் சோழா சோழா என்ற இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது.
இயக்குநர் மணிரத்னம்
இயக்குநர் மணிரத்னம் சிறப்பான பல படங்களை இயக்கி சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். இவரது பல படங்கள் சிறப்பான அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவை. அதிகமான டயலாக்குகள் இல்லாமல் உடல்மொழி மூலமாக நடிகர்களை சிறப்பாக நடிக்க வைத்து அதன்மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டவர் மணிரத்னம்.

சிறப்பான படங்களுக்கு சொந்தக்காரர்
பல முன்னணி இயக்குநர்களையும் இயக்கிய மணிரத்னம், சிறிய நடிகர்களையும் கைத்தூக்கி விட்டவர். இவரது பல படங்கள் நடிகர்களுக்காக இல்லாமல் சிறப்பான கதையமைப்பிற்காக வெற்றிப்படங்களாக ஆனவை. அந்த வகையில் பல படங்களை எடுத்துக்காட்டலாம்.

பொன்னியின் செல்வன் படம்
தற்போது தன்னுடைய கனவு ப்ராஜெக்ட்டான பொன்னியின் செல்வன் படத்தை வைராக்கியத்தோடு இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பான் இந்தியா படம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் மற்றும் பொன்னி நதி என்ற முதல் பாடல் கடந்த சில வாரங்களில் மிகவும் பிரம்மாண்டமாக சென்னையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் சோழா சோழா என்ற படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.

இரண்டாவது பாடல் வெளியீடு
ஐதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழில் இந்தப் பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த விழாவில் படத்தின் நாயகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தி இருவரும் சிங்கங்களாக கலந்துக் கொண்டு அனைவரையும் கவர்ந்தனர்.

சோழா சோழா பாடல்
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் இந்தப் பாடலில் விக்ரம் பிரதானமாக காணப்படுகிறார். முதலில் வெளியான பொன்னி நதி பாடலில் கார்த்தி மையமாக இருந்த நிலையில், இந்தப் பாடல் மிகவும் சிறப்பான வரவேற்பையும் அதிகமான வியூஸ்களையும் பெற்றது.

பிரம்மாண்டங்களின் உச்சம்
அதேபோல தற்போது வெளியாகியுள்ள சோழா சோழா பாடலும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள இந்தப் பாடலும் ரசிகர்களை சிறப்பாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம். பிரம்மாண்டங்களின் உச்சத்தில் எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் ரிலீசுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.