சென்னை: ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத்தொகையை ஆக.4ம் தேதியே வழங்கப்பட்டுவிட்டது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். PRAAPTI PORTAL-ல் மின்னுற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும், ஆனால் டான்ஜெட்கோ பதில் அளிக்கும் வழிவகை இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.
