
ஒர்க்அவுட் வீடியோவை வெளியிட்ட ரம்யா நம்பீசன்
தமிழில் ஒரு நாள் ஒரு கனவு, ராமன் தேடிய சீதை, பீட்சா, சேதுபதி என பல படங்கள் நடித்தவர் ரம்யா நம்பீசன். தற்போது தமிழில் தமிழரசன், ரேஞ்சர் உள்பட சில படங்களில் நடித்து வரும் ரம்யா நம்பீசன் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது உடல் எடையை குறைப்பதற்காக வியர்வை சொட்ட சொட்ட தான் உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதோடு, ஜிம்முக்கு செல்வது, கொழுப்பை குறைப்பது என்பது மற்றவர்களுக்காக அல்ல. என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்கிறேன். அதன் மூலம் வெளிவரும் வியர்வை ஆனந்தத்திற்கு வழிவகுத்தது என்று பதிவு செய்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வொர்க் அவுட் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.