சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய அமைச்சர் சிவசங்கர், வரும் காலத்தில் கட்டண உயர்வு ஏற்படாதவாறு, ஆம்மின பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்து உள்ளார். மேலும், தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பரம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றும் கூறி உள்ளார்.
சமீப காலமாக விடுமுறை தினங்களில் இயக்கப்படும் ஆம்மின பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இதையடுத்து, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அதை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறைஅமைச்சர் சிவசங்கர், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் ஆலோசித்து, அடுத்தடுத்து வரும் தொடர் விடுமுறைகளின்போது, டிக்கெட் கட்டண உயர்வு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார். மேலும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.11.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
மேலும், சென்னை மாநகர பேருந்து நஷ்டத்தால் தொடர்ந்து இயங்கி வருவதால் அதனை தடுக்க புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. என்றும், அதன் படி, சென்னை மாநகர அரசு பேருந்துகளில் பயணிகளின் இருக்கைக்கு பின்புறம், வெளிப்புற கண்ணாடிகள் மூலம் விளம்பரம் செய்துகொள்ள ஒப்பந்தங்கள் செய்ய்யப்பட்டு அதன் மூலம் வருமானம் ஈட்ட அரசு முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் நஷ்டத்தை தவிர்க்க முயற்சி மேற்கொள்ள உள்ளது.