ஐதராபாத் : நடிகர்கள் விக்ரம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு இன்றைய தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு, படம் குறித்த தங்களது எக்ஸ்பீரியன்சை ஷேர் செய்தனர்.
படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் இந்த நிகழ்ச்சியில் சூப்பரான கெட்டப்பில் கலந்துக் கொண்டு பேசினார்.
பிரம்மாண்ட படைப்பு
பொன்னியின் செல்வன் படம் இயக்குநர் மணிரத்னத்தின் பிரம்மாண்டமான இயக்கத்தில் செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச அளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் வெளியீட்டிலேயே படக்குழுவினர் பிரம்மாண்டம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றனர்.

சோழா சோழா பாடல் வெளியீடு
இன்றைய தினம் படத்தின் இரண்டாவது சிங்கிள் சோழா சோழா ஐதராபாத்தில் நடந்த சிறப்பான நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காக இவர்கள் முன்னதாக ஐதராபாத் விமானநிலையத்தில் வந்திறங்கிய நிலையில் இருவருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டது.

விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு
இருவரும் கருப்பு நிற உடையில் காணப்பட்டனர். இந்நிலையில் இன்றைய தினம் மாலை இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிள் ஐதராபாத்தில் நடந்த சிறப்பான நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. தமிழில் இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

கனவு நனவான தருணம்
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கார்த்தி, விக்ரம் உள்ளிட்டவர்கள் மேடையேறி பேசி தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய விக்ரம் தெலுங்கில் சரளமாக பேசி ரசிகர்களின் கரகோஷத்தை பெற்றார். இந்தப் படம் தன்னுடைய கனவு நனவான தருணம் என்று குறிப்பிட்டார்.

விக்ரம் பெருமை
ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குநர்களின் படங்களில் இணைந்து நடிப்பது மிகுந்த பெருமையை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, பிரகாஷ்ராஜ் போன்றவர்களுடன் இணைந்து நடித்தது குறித்தும் அவர் பெருமையுடன் சுட்டிக் காட்டினார்.

சிறப்பான விக்ரம் கெட்டப்
இந்த நிகழ்ச்சியில் கோட் சூட்டுடன் கலந்துக் கொண்டார் கார்த்தி. விக்ரமின் கெட்டப்பும் சிறப்பாக காணப்பட்டது. பா ரஞ்சித்தின் படத்திற்காக வளர்த்துவரும் தாடியுடன் அவர் கெத்தாக காணப்பட்டார். ரசிகர்களின் சிறப்பான வரவேற்பையும் அவரது கெட்டப் பெற்றது. கடந்த டீசர் வெளியீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக விக்ரம் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.