சென்னை:
மணிரத்னம்
இயக்கியுள்ள
‘பொன்னியின்
செல்வன்’
திரைப்படம்
செப்டம்பர்
30ம்
தேதி
வெளியாகிறது.
இப்படத்தில்
இருந்து
ஏ.ஆர்.
ரஹ்மான்
இசையில்
‘சோழா
சோழா’
என்ற
இரண்டாவது
பாடல்
வெளியாகியுள்ளது.
சோழனின்
வருகையை
விவரிக்கும்
விதமாக
உருவாகியுள்ள
இப்பாடல்
நல்ல
வரவேற்பை
பெற்று
வருகிறது.
பிரமாண்டமாக
வெளியாகும்
பொன்னியின்
செல்வன்
எம்ஜிஆர்
முதல்
கமல்
வரை
பல
பிரபலங்கள்
படமாக
எடுக்க
முயன்ற
‘பொன்னியின்
செல்வன்’,
தற்போது
மணிரத்னம்
இயக்கத்தில்
முழுமையடைந்துள்ளது.
விக்ரம்,
கார்த்தி,
ஜெயம்
ரவி,
ஐஸ்வர்யா
ராய்,
த்ரிஷா
உள்ளிட்ட
பலர்
நடித்துள்ள
இப்படம்,
செப்டம்பர்
30ம்
தேதி
வெளியாகிறது.
ஏ.ஆர்.
ரஹ்மான்
இசையமைத்துள்ள
‘பொன்னியின்
செல்வன்’
ஐமேக்ஸ்
தொழில்நுட்பத்தில்
வெளியாகவுள்ளது
குறிப்பிடத்தக்கது.
வெளியான
செகண்ட்
சிங்கிள்
ரசிகர்களிடம்
அதிக
எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ள
‘பொன்னியின்
செல்வன்’
படத்தில்
இருந்து,
‘பொன்னி
நதி’
பாடல்
ஏற்கனவே
வெளியாகிவிட்டது.
இதனையடுத்து
சோழனாக
நடித்துள்ள
விக்ரமின்
இண்ட்ரோ
சாங்,
இப்போது
வெளியானது.
அனிருத்
இப்பாடலை
தனது
ட்வீட்டர்
பக்கத்தில்
வெளியிட்டுள்ளார்.
இளங்கோ
கிருஷ்ணன்
எழுதிய
இப்பாடலை,
சத்ய
பிரகாஷ்,
விஎம்
மகாலிங்கம்,
நகுல்
அபயங்கர்
ஆகியோர்
பாடியுள்ளனர்.
மிரட்டும்
ரஹ்மானின்
இசை
பொன்னி
நதி
பாடலில்
இருந்த
பிரமாண்டத்தை
விடவும்,
‘சோழா
சோழா’
பாடலின்
இசையில்
இன்னும்
அதகளப்படுத்தியுள்ளார்
ரஹ்மான்.
Fusiion
இசை
ஜானரில்
உருவாகியுள்ள
இந்தப்
பாடலில்
முரசுகள்
அதிர,
அதனிடையே
ஒலிக்கும்
தவிலின்
இசை
ஜிலீரென
வசீகரிக்கிறது.
“கொடி
கொடி
கொடி
பறக்க,
தட
தடத்து,
பரி
பரி
துடிக்க,”
என
படு
ஆக்ரோஷமாக
தொடங்குகிறது
இப்பாடல்.
அதேபோல்,
“வாளோடு
வேலோடு,
போராடு
போராடு,
படபட
புலிக்
கொடி,
வானம்
ஏறட்டும்,
புவிநிலம்
புவிநிலம்,
சோழம்
ஆகட்டும்’
என்ற
வரிகள்,
சிலிரிக்க
வைக்கின்றன.
வார்த்தை
ஜாலத்தில்
சோழனின்
வரலாறு
அதேபோல்,
மண்
மீதும்,
பெண்
மீதும்,
மது
மீதும்
சோழன்
பித்தானதை
விவரிக்கும்
வரிகள்,
‘சோழா
சோழா’
பாடலுக்கு
சிறப்பு
சேர்த்துள்ளது.
விக்ரமின்
கேரியரில்
அவருக்கான
மாஸ்டர்
பாடலாக,
‘சோழா
சோழா’
அமைந்துள்ளதாக
ரசிகர்கள்
கமெண்ட்ஸ்
செய்து
வருகின்றனர்.
ரஹ்மான்,
மணிரத்னம்
கூட்டணியில்
‘சோழா
சோழா’
பாடல்,
மற்றுமொரு
மாஸ்
மேஜிக்
எனவும்
ரசிகர்கள்
கூறி
வருகின்றனர்.