தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்ந்து 1800 டாலர்களுக்கு கீழாகவே காணப்படுகின்றது. இது இன்னும் தங்கம் விலை குறையலாம் என்ற உணர்வினையும் ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலையானது தற்போதைய நிலையில் சற்று குறைந்திருந்தாலும், இது மீண்டும் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நிபுணர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்.
சூப்பர் சான்ஸ்.. இன்றும் தங்கம் விலை குறைந்திருக்கு..வாங்க நல்ல சான்ஸ்!

மீண்டும் அதிகரிக்கலாம்?
தங்கம் விலையானது மீண்டும் அடுத்த ஆண்டில் 2000 டாலர்களுக்கு மேலாக அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருப்பதால், நிச்சயம் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
பணவீக்கம் இன்னும் அதிகரிக்கலாம். இது நீண்டகாலத்திற்கு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

ரெசசன் அச்சம்
தொடர்ந்து மத்திய வங்கிகள் ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதன் காரணமாக பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் பல நாடுகளும் ரெசசனை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதரவாகவே அமையலாம்.

மீடியம் டெர்மில் எப்படியிருக்கும்?
மீடியம் டெர்மில் தங்கம் விலை குறைந்தாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆக தங்கம் விலையானது குறைந்த விலைக்கு கிடைக்கும்போது வாங்கி வைக்கலாம். இது முதலீட்டாளர்களுக்கு சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்
சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனை சீனா தாய்வான் பிரச்சனை, பணவீக்கம், டாலர் மதிப்பு என பலவும் தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம். ஆக மேற்கண்ட பிரச்சனைகளுக்கு சுமூக நிலை எட்டப்படுமாயின் அது தங்கம் விலையில் பெரியளவிலான சரிவினை ஏற்படுத்தலாம். எனினும் அதுவரையில் பெரியளவில் குறைய வாய்ப்பில்லை. பணவீக்கம் உள்ளிட்ட காரணிகள் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1766.25 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதே வெள்ளி விலையும் கிட்டதட்ட 1% குறைந்து, 19.273 டாலராக காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது தற்போது 10 கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து, 51,463 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலையும் கிலோவுக்கு 501 ரூபாய் குறைந்து, 55,942 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. சர்வதேச சந்தையில் விலை தடுமாறும் நிலையில், இந்திய சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்து தான் காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து, 4822 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 126 ரூபாய் குறைந்து, 38,576 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து, 5260 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 42,080 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 136 ரூபாய் குறைந்து, 52,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 40 பைசா குறைந்து, 62 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 620 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 62,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.48,220
மும்பை – ரூ.47,800
டெல்லி – ரூ.47,950
பெங்களூர் – ரூ.47,850
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,220
gold price on 19th August 2022: Gold prices may rise closer to Rs.60,000 next year
gold price on 19th August 2022: Gold prices may rise closer to Rs.60,000 next year/ கோகுலாஷ்டமி-ல் சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு விலை குறைந்திருக்கு தெரியுமா?