கோவை: கனமழையால் தமிழ்நாடு- கேரளா எல்லையில் யானையை தேடும் பணி சவாலாக உள்ளது என வனத்துறையினர் தகவல் அளித்தனர். ஆனைக்கட்டி அட்டப்பாடி பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருவதால் 2 குழுக்களாக பிரிந்து வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தனிமையில் இருந்த யானை, தற்போது மற்ற யானைகளோடு இணைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
