நீலகிரி: சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு உதகையில் தனியார் கேளிக்கையா பூங்காவில் 2600 கேமராக்கள் பிரத்தியேக அரங்கம் அமைக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த அரங்கில் 1880 ஆண்டில் இருந்து 2017ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட பலவகையான கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. உலகில் மிக பெரிய கேமரா என்று அழைக்கப்படும் மம்மூத் கேமரா முதல் நவீன டிஜிட்டல் கேமரா வரை அனைத்து கேமராகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டம் உலக போரின் போது போர் முனையில் பயன்படுத்தப்பட்ட மிஷின் கண் வடிவிலான மூவி கேமரா, உளவு பார்ப்பதற்காக உருவாக்கப்ட்ட ஸ்பை கேமரா, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள பிஸ்டல் வடிவிலான கேமரா, சிகரெட் லைட்டர் கேமராக்கள் கவனம் ஈர்க்கின்றனர்.
லண்டன் தயாரிப்பான ஒரே கிளிக்கில் ஸ்டாம்ப் அளவிலான 15 படங்களை எடுக்கும் ராயல் மேல் ஸ்டாம்ப் கேமரா, அமெரிக்க தயாரிப்பான பெட்டர்மாஸ் விளக்கு வடிவிலான ப்ரொஜெக்டரும் கூடிய கேமரா, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு எடுத்து சென்ற சுவீடன் தயாரிப்பான ஆசான் பிளேடு, தங்கம் மூலம் பூசப்பட்டு உருவாக்கப்பட்ட நீக்கான் கேமரா என காண அரிதான கேமராக்கள் கட்சிக்கு வைக்கப்பட்டன. இவை அனைத்தும் தற்போது பயன்பாட்டில் இருப்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த அருங்காட்சியகம் பிரமிப்பை ஏற்படுத்துவதோடும் ஒரு அறிய கண்டுபிடிப்பின் வளர்ச்சி அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் தகவல் களஞ்சியமாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.