புதுக்கோட்டையில் நேற்றிரவு பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் , அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசியது:
புதுக்கோட்டை எம்.பி தொகுதிசிலரின் ஆதாயத்துக்காக 4 பகுதிகளாக துண்டாடப்பட்டுள்ளது. தொகுதி மறு சீரமைப்பு வரும்போது புதுக்கோட்டை எம்.பி தொகுதி மீண்டும் உருவாக்கப்படும். சமூக நீதி, சமநீதி பேசும்திமுக ஆட்சியில், சுதந்திர தினத்தில் 20 ஊராட்சி மன்றத் தலைவர்களால் தேசியக் கொடியேற்ற முடியவில்லை.
22 ஊராட்சி மன்றத் தலைவர்களால் அவர்களின் நாற்காலியில் அமர முடியவில்லை. 42 ஊராட்சி மன்றத் தலைவர்களின் பெயர்ப் பலகையை வைக்க முடியவில்லை. இதற்கு காரணம், அவர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.
திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத இடமே இல்லை என்ற நிலைஏற்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகஎங்கே இருக்கிறது எனக் கேட்டார் கருணாநிதி. இப்போது அனைத்து இடங்களிலும் பாஜகவினர் நிரம்பியுள்ளனர். முதலில்கேலி செய்வார்கள். அடுத்துதிட்டுவார்கள். பிறகு அடக்குமுறையை ஏவிவிடுவார்கள். தொடர்ந்து, எதிரி என்பார்கள். இவற்றைச் சந்தித்தவர்கள் ஆட்சிக்கு வருவார்கள்.
தமிழகத்தில் இப்போது நாம் 3-வது இடத்தில் இருக்கிறோம். பாஜக தலைவர்கள், கட்சியினர் மீது அடக்குமுறை ஏவிவிடப்படுகிறது. எனவே, நாம் நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு நடந்ததுதான் இங்கே திமுகவுக்கும் நடக்கும் என்றார்.