சீனாவிலும் கடும் வறட்சி : நதிகள் வறண்டு பாலைவனமாகின| Dinamalar

பீய்ஜிங்: பிரிட்டனை தொடர்ந்து, சீனாவிலும் பெரும்பாலான மாகாணங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது.

சீனாவின் தென்கிழக்கில் 20–க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 66 நதிகள் வறண்டு பாலவனமாகின.இதற்கு காரணம் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட காட்டுத்தீ, அனல் காற்று, கோடை வெப்பம் என கூறப்படுகிறது. வற்றாத ஜீவ நதிகள் இன்று வறண்டு போய் பாலைவனமாக காட்சியளிப்பதை பல்வேறு ஊடங்கள் புகைப்படங்களாக செய்தி வெளியிட்டு அரசை எச்சரித்துள்ளன.

இதையடுத்து இம்மாகாணங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுத்து சீன அரசு நீர்நிலைகளை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.