அரியாங்குப்பம் : வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர்த் திருவிழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்திப் பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தேர்த் திருவிழா நேற்று காலை நடந்தது. காலை 8:00 மணியளவில், கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.புதுச்சேரி முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி கோஷங்கள் முழங்க தேரை இழுத்து சென்றனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் மாட வீதிகள் வழியாக ஆடி அசைந்து சென்று நிலையை வந்தடைந்தது. பின், செங்கழுநீர் அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது.
விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., தட்சிணாமூர்த்தி, முதலியார் பேட்டை எம்.எல்.ஏ., சம்பத், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தேரோட்டத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீராம்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.தெற்கு எஸ்.பி., விஷ்ணுகுமார், போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியிலும், வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார வசதி களை, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் செய்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement