சென்னை : தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான கி.பி., 1639ம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியை நினைவூட்டும் வகையில், கடந்த 2004ம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1996 ஜூலை 17 அன்றுதான் மெட்ராஸ், சென்னை எனப் பெயர் மாற்றம்பெற்றது.
உலகின் பெருநகரங்களில் ஒன்றாக திகழும் இன்றைய சென்னை 383 ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது.சென்னை பட்டினம், பட்டினம், மெட்ராஸ், சென்னை என பல பெயர்களை கொண்ட இந்த நகரம் தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்ல, சினிமாவின் தலைநகரமும் தான்.
கனவு நகரம் என வர்ணிக்கப்படும் சென்னை பழைய காலம் துவங்கி, தற்போது வரை சினிமாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி சென்னையில் உள்ள ஏரியாக்களை மையப்படுத்தி சமீப ஆண்டுகளில் வெளிவந்த படங்களில் பிரபலமான 5 படங்களை இங்கே பார்க்கலாம்.
மெட்ராஸ்
டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி, கேத்ரின் தெரசா உள்ளிட்டோர் நடித்து 2014 ம் ஆண்டு ரிலீசான படம் மெட்ராஸ். வடசென்னையை பின்புலமாக கொண்டு எடுக்கப்பட்ட அரசியல், ஆக்ஷன் படம். ஒரு சுவருக்காக இரண்டு அரசியல் கட்சிகள் இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் கதை.
வடசென்னை
டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து, 2018 ம் ஆண்டு ரிலீசான படம் வடசென்னை. லோக்கல் ரெளடி கும்பல் பற்றிய கதை. வடசென்னையில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே காட்டிய படம். மீன சமுதாயத்தினர் பற்றிய சில சீன்கள், வசனங்கள் சர்ச்சையாக்கப்பட்டதால் சில சீன்கள் நீக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
தரமணி
டைரக்டர் ராம் எழுதி, இயக்கிய படம் தரமணி. ஆண்ட்ரியா, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், பல விருதுகளையும் வென்றது. தரமணியில் வசிக்கும் ஒரு பெண் பற்றிய கதை. 2017 ம் ஆண்டு ரிலீசான இந்த படத்தில் அஞ்சலி, அழகன் பெருமாளம், சதீஷ் குமார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
புதுப்பேட்டை
டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆக்ஷன், க்ரைம் நிறைந்த படம் புதுப்பேட்டை. 2006 ம் ஆண்டு ரிலீசான இந்த படத்தில் சோனியா அகர்வால், சிநேகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பல இடங்களில் ஆட்டோ ஷங்கரின் வாழ்க்கை ரெஃபரன்ஸ்கள் பல இடங்களில் காட்டப்பட்டுள்ள படம். இதில் கொக்கி குமாரு என்னும் லோக்கல் ரெளடி ரோலில் தனுஷ் நடித்துள்ள படம். ஒரு சிறுவன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எப்படி ரெளடி ஆகிறான் என்பதை கட்டி உள்ள படம்.
மாநகரம்
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கிய ஆக்ஷன், த்ரில்லர் படம். 2017 ம் ஆண்டு ரிலீசான இந்த படத்தில் ஸ்ரீ, சுதீப் கிஷன் ,ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் இளைஞர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை. லோகேஷ் கனகராஜ் டைரக்டராக அறிமுகமான மாநகரம் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.